ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை, நண்பர்களுடன் ஸ்டிக்கர்களாக வாட்ஸ்அப்பில் பகிர்ந்துகொள்ள பிளே ஸ்டோரில், Rakshabandhan stickers 2019", "Rakhi stickers", or "Rakhi stickers for WhatsApp என்று சர்ச் செய்து நண்பர்களுடன் ரக்ஷாபந்தன் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.
இந்தியாவில் 400 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்திவருகின்றனர். இதன்மூலமாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. பண்டிகை நாட்களில், பரிமாறப்படும் தகவல்கள், வாழ்த்துகளின் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டும் என்றால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வாட்ஸ்அப்பில் பெரும்பாலும் தகவல்கள், வாழ்த்துகள் ஸ்டிக்கர்களாகவே பரிமாறப்பட்டு வருகின்றன.
பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப் செயலியின் அப்டேட்களை அவ்வப்போது வழங்கிவருகின்றன. அந்த அப்டேட்களை நாம் தவறாது செய்துவந்தாலே, புதிய புதிய வசதிகளை பெறலாம். வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே ஸ்டிக்கர்கள் வசதி உள்ள நிலையில், நமக்கு அதிக ஸ்டிக்கர்கள் தேவைப்படும் பட்சத்தில் பிளேஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
ரக்ஷா பந்தன் ஸ்டிக்கர்ஸ், ராகி ஸ்டிக்கர்ஸ் என சர்ச் செய்து அதை வாட்ஸ்அப்பில் இணைத்துக்கொண்டால், சாட் பாக்சில் அந்த ஸ்டிக்கர்கள் தோன்றும், நாம் அதை விரும்பிய நண்பர்களுக்கு அனுப்பி அவருடன் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.