ராமர் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், 51 இஞ்ச் குழந்தை ராமர் சிலைக்கான சிறப்பு பூஜை, வழிப்பாடு முறை நேற்று முடிவடைந்தது.
புதிய சிலையின் கண்கள் இன்னும் துணியால் கட்டப்பட்டுள்ளது. ஆதிவாஸ் வழிபாடு முறை நடைபெற்றது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களான மகாராஷ்டிரா, கொல்கத்தா, தமிழ்நாட்டில் இருந்து கொண்டவரப்பட்ட மலர்களால் கட்டபட்ட திரைச்சீலை உருவாக்கப்பட்டது.
50 கிலோ மலர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது. தாமரை, ரோஜா, மல்லி பூக்களால் ஆனது. ஸ்நபனம் என்ற வழிப்பாடு முறை 3 மணி நேரம் நீடித்துள்ளது. 81 கைலாஷ் இடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து கருவறை சுத்தம் செய்யப்பட்டது. மேலும் மருத்துவ குண முள்ள தண்ணீர், பசு மூத்திரம், தேர்வுசெய்யப்பட்ட பழங்களின் சாறு பயன்படுத்தப்பட்டது.
நாளை ராமர் கோவில் திறக்கும் போது பழய ராமர் சிலை கருவறைக்கும் கொண்டு வரப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலையில், இந்த சிலை கருவறைக்குள் கொண்டு வரப்படும். இதன் தரிசனம் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சத்யேந்திரா தாஸ் என்ற பூசாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சக்ரதிவாஸ், பகாலா திபாஸ், புஷ்ப திபாஸ், ஆகியவை செய்யப்படுகிறது. ராமர் சிலைக்கு சர்க்கரை, ஸ்வீட், பழங்கள் வழப்படும். கடைசியாக மலர்கள் தூவப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“