முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி தலைமையிலான இந்துஸ்தானி ஹவாம் மோர்ச்சா (எச்.ஏ.எம்) கட்சி சிராக் பஸ்வான் மீது களங்கம் சுமத்தும் வகையில் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. ராம் விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சைக்குப் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நடவடிக்கைக்கு இந்த நடவடிக்கை எல்.ஜே.பி தலைவரும் ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான, சிராக் பஸ்வான் உடனடி உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். எச்.ஏ.எம் தலைவர் ஜிதன் ராம் மாஞ்ஜி எனது தந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்ட போதும் அவர் நோயுற்ற எனது தந்தையை ஏன் வந்து பார்க்கவில்லை என்று கேட்டுள்ளார்.
எஸ்.ஏ.எம் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் ரிஸ்வான் கையெழுத்திட்டுள்ள அந்த கடிதத்தில், ராம் விலாஸ் பஸ்வானின் மரணம் தொடர்பாக பல கேள்விகள் சிராக் பஸ்வானின் பங்கை சுட்டிக்காட்டுகின்றன.
யாருடைய அறிவுறுத்தல்களின் பேரில் மருத்துவமனை தங்கள் மையத்தில் அனுமதிக்கப்பட்ட கேபினெட் அமைச்சரின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கைகளை வெளியிடவில்லை என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மட்டுமே அவரை சந்திக்க அனுமதிக்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டது யார் என்பதையும் அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளது.
சிராக் பஸ்வான் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஒரு வீடியோ செய்திக்கு தயாராவதைக் காட்டும் ஒரு வீடியோவைக் குறிப்பிட்டு, எல்.ஜே.பி தலைவரின் மகிழ்ச்சியான மனநிலை மேலும் பலரிடையே சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக எச்.ஏ.எம் கூறியுள்ளது. இதற்கு, எல்.ஜே.பி தலைவர் சிராக் பஸ்வான், வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதால் இந்த வீடியோ ஒத்திகை தேவைப்பட்டது என்று பின்னர் விளக்கி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சிராக் பஸ்வான், இந்த கடிதத்தின் பின்னால் இருப்பவர்கள் தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சிராக் பஸ்வான், “எனது தந்தையின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் மாஞ்ஜியிடம் கூறினேன். ஆனால், அவர் ஒருபோதும் அவரைப் பார்க்க வரவில்லை. மாஞ்ஜி இப்போது என் தந்தையைப் பற்றி பேசும் விதம்… அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஏன் இவ்வளவு அக்கறை காட்டவில்லை? ” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “எல்லோரும் இப்போது இறந்தவரின் மீது அரசியல் செய்கிறார்கல். அவர் உயிருடன் இருந்தபோது யாரும் அவரைப் பார்ப்பதற்கு வரவில்லை ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"