‘நான் எவ்வளவோ விஷயங்கள் பேசினேன்; இரண்டு வரிகளில் எல்லாம் மாறிவிட்டது’ – சர்ச்சைக்கு குஹா விளக்கம்

பாரதிய ஜனதா கட்சி 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. மோடி மீண்டும் பிரதமராக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியது. அதேசமயம், அக்கட்சியின் அப்போதைய தலைவரான ராகுல் காந்தி கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற…

By: Updated: January 18, 2020, 10:32:57 PM

பாரதிய ஜனதா கட்சி 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. மோடி மீண்டும் பிரதமராக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியது. அதேசமயம், அக்கட்சியின் அப்போதைய தலைவரான ராகுல் காந்தி கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

ஹிட்லர் ஆட்சியில் நடந்தவை இப்போது இந்தியாவில் வெளியாகிறது; சிஏஏ குறித்து பஞ்சாப் முதல்வர்

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியலில் கடின உழைப்பாளியான பிரதமர் மோடிக்கு இணையாக ஒரு போதும் வாய்ப்பில்லை என கேரளாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற கேரளா இலக்கிய விழாவில் பேசிய குஹா, “சுதந்திர போராட்டத்தின் போது மிகப்பெரிய காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப நிறுவனமாக மாறியதே, தற்போது இந்தியாவில் இந்துத்வாவும், போர்க்குணமும் தலைதூக்க காரணமாகும். ராகுல் காந்தி ஒரு கண்ணியமான மனிதர். தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

கேரள மக்களே, நீங்கள் இந்தியாவுக்காக பல அற்புதமான காரியங்களைச் செய்துள்ளீர்கள், ஆனால் நீங்கள் செய்த பேரழிவு காரியங்களில் ஒன்று ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்தது ஆகும். 2024ம் ஆண்டும் நீங்கள் ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்தால் அது பிரதமர் மோடிக்கே நன்மையாக முடியும். பிரதமர் மோடி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை ஆண்டுள்ளார். ராகுலைப் போல விடுமுறையை கழிக்க ஐரோப்பா செல்பவர் அல்ல மோடி. மிகுந்த அரசியல் அனுபவம் உடைய பிரதமர் மோடிக்கு இணையாக ராகுல் காந்தி ஒருபோதும் வரமுடியாது.’ என கூறினார்.

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி மனு; உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

ராமச்சந்திர குஹாவின் இந்த பேச்சுக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவர் தனது ட்விட்டரில், நான் ஒருமணி நேரத்தில் ராகுல் காந்தி பற்றி பேசியதைத் தாண்டி எவ்வளவோ விஷயங்களைப் பற்றி பேசினேன்.

ஆனால், அந்த ரிப்போர்ட்டர் குறிப்பிட்ட இரண்டு வரிகளை மட்டும் எடுத்து போட்டு எனது உரையின் பொருளையே சிதைத்துவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Ramchandra guha rahul gandhi congress hindutva constitution protests caa nrc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X