அமைச்சராக இருப்பதால் பெட்ரோல் டீசல் விலை என்னை பாதிக்கவில்லை - ராம்தாஸ் அத்வாலே

மாநில அரசுகள் கச்சாப் பொருட்களில் விதித்திருக்கும் வரியை நீக்கினால் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகமாட்டார்கள் என கருத்து

ராம்தாஸ் அத்வாலே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து கருத்து : மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்தியக் குடியரசுக் கட்சியும் முக்கிய பங்காற்றுகிறது. இதன் தலைவர் ராம்தாஸ்,  மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஒரு மாதமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையானது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டே வருகிறது. அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் வரியை குறைக்கக் கோரியும் எதிர்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் வரி விதிப்பினை குறைக்க இயலாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.

அமைச்சராக இருப்பதால் பாதிப்பு ஏதும் இல்லை – ராம்தாஸ் அத்வாலே

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ராம்தாஸ் அத்வாலே. அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு  “நான் ஒரு அமைச்சராக இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் பாதிக்கப்படவில்லை. ஒரு வேலை இந்த பதவியில் இருந்து நான் விலகினால் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படலாம்” என்று கூறியிருக்கிறார்.

Read More : To read this article in English

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மக்கள் அவதியுறுவதை புரிந்து கொள்ள இயலுகிறது. மேலும் மாநில அரசு பெட்ரோல் மீது விதிக்கும் வரிகளை குறைத்துக் கொள்ளும் பட்சத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறினார். மேலும் மத்திய அரசு இந்த விலைவாசி உயர்வினை குறைப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close