ஊடகங்களில் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது மும்பை உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
தலித் வார்த்தைக்குத் தடை
சமீபத்தில் மத்திய அமைச்சகம் ஊடகங்கள் “தலித் என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை புண்படுத்தக் கூடிய சொல்லாக இருப்பதால் தலித் வார்த்தையை தவிர்த்துவிட்டு பட்டியல் இனத்தவர் என்று குறிப்பிட உத்தரவிட்டது. Schedule caste என்பதற்கு இணையான பிராந்திய மொழி வார்த்தைகளை பிரயோகிக்கவும் உத்தரவிட்டது”.
அதனை மறுபரீசிலனை செய்யக் கூறியும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது மத்திய அமைச்சகம்.
அதனைத் தொடர்ந்து ல், ஊடகங்கள் `தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பினை வெளியிட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ராம்தாஸ் அத்வாலே எதிர்ப்பு
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் இந்தியக் குடியரசுக் கட்சியும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அதன் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருக்கிறார்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இச்செயல்பாடு வருத்தமளிப்பதாக இருக்கிறது என்று கூறியுள்ளார், மேலும் அரசு அலுவலகங்களில் பட்டியல் இனத்தவர் என்று இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் ஊடகங்களை தலித் என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது என்று சொல்வது நியாயம் ஆகாது என்றும் அவர் கூறியுள்ளார்.