மார்ச் 1 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் செகண்ட் ஹேண்ட் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தியது, அந்த தொலைபேசியை முதலில் வாங்கிய கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க தொண்டர் ஒருவரிடம் விசாரணைக்கு வழிவகுத்தது, என வட்டாரங்கள் வெளிப்படுத்தின.
ஆங்கிலத்தில் படிக்க: Rameshwaram Cafe blast: Second-hand phone used by arrested man leads to questioning of BJP worker
சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க தொண்டர் சாய் பிரசாத், இந்த வாரம் தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார், பின்னர் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
மார்ச் 27 அன்று என்.ஐ.ஏ.,வால் (NIA) தேடப்பட்ட சந்தேக நபரான சர்தார் நவீத் நடத்தும் தீர்த்தஹள்ளியில் உள்ள மொபைல் ஸ்டோருக்கு சாய் பிரசாத் அடிக்கடி வருபவர் என்று விசாரணையாளர்கள் தெரிவித்தனர். சர்தார் நவீத்தின் மொபைல் ஸ்டோரில் பா.ஜ.க தொண்டரான சாய் பிரசாத் மொபைல் போனை விற்றார்.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட ஒரே நபரான முஸம்மில் ஷரீப் (30) என்பவர் பா.ஜ.க பிரமுகரான சாய் பிரசாத் வாங்கிய மொபைல் போனை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.
"கைது செய்யப்பட்ட நபர் பயன்படுத்திய செகண்ட் ஹேண்ட் கைபேசி, சாய் பிரசாத்தை என்.ஐ.ஏ ஸ்கேனரின் கீழ் கொண்டு வந்தது" என்று போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூருவில் பணிபுரிந்து வாழ்ந்து வந்த முஸம்மில் ஷரீப், ராமேஸ்வரம் ஓட்டலில் ஐ.இ.டி வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்து காணாமல் போன இரு முக்கிய சந்தேக நபர்களான ஐ.இ.டி சாதனத்தை வைத்ததாகக் கருதப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப், 30, மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி அப்துல் மதின் தாஹா, 30, ஆகியோருக்கு மொபைல் சிம்கள் மற்றும் ஐ.இ.டி தயாரிப்பதற்கான பொருட்கள் உள்ளிட்ட தளவாட உதவிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஃபோன் உபயோகத்தின் தொழில்நுட்ப பகுப்பாய்வு, பா.ஜ.க தொண்டரின் தொலைபேசியின் ஐ.எம்.இ.ஐ எண்ணை வெளிப்படுத்தியது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
"வழக்கு ஒரு பயங்கரவாத சம்பவம், சாட்சிகளின் அடையாளம் பற்றிய எந்த தகவலும் விசாரணைக்கு ஏற்றதாக இருக்கலாம், தனிநபர்கள் வரவழைக்கப்படும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்" என்று பா.ஜ.க தொண்டர் சந்தேகத்திற்குரியவர் என்று அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து என்.ஐ.ஏ வெள்ளிக்கிழமை கூறியது.
முன்னதாக, மார்ச் நடுப்பகுதியில், பல்லாரியில் இருந்து சையத் ஷபீர் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபரை, குண்டுவெடிப்பு நடந்த எட்டு மணி நேரத்திற்குப் பிறகு, மார்ச் 1 ஆம் தேதி இரவு பல்லாரியில் முக்கிய சந்தேக நபருடன் தொடர்பு கொண்டதாக சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ கைது செய்தது. பின்னர் விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டார்.
மார்ச் 27 அன்று 18 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது மற்றும் பலரை விசாரணைக்கு அழைத்தது. தேடப்பட்ட இடங்களில் காணாமல் போன சந்தேக நபர்களின் முன்னாள் நண்பரான சர்தார் நவீத்தின் மொபைல் போன் கடையும் இருந்தது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முஸம்மில் ஷரீப் என்பவரும் தீர்த்தஹள்ளியில் குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ள இவரும் கடைக்கு அடிக்கடி வந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 27 அன்று, முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் கஃபேயில் ஐ.இ.டி (IED) குண்டுவெடிப்பை நடத்தி, ஒன்பது பேரைக் காயப்படுத்தியவர்கள், சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த "முசாவிர் ஹுசைன் ஷாசிப் மற்றும் துணை சதிகாரர் அப்துல் மதின் தாஹா" என்று என்.ஐ.ஏ அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளது.
மார்ச் 29 அன்று, என்.ஐ.ஏ சென்னை மாலில் உள்ள ஒரு துணிக்கடையில் இருந்து சி.சி.டி.வி படங்களை வெளியிட்டது, இது முக்கிய சந்தேக நபர் மற்றும் அவரது கூட்டாளியின் அடையாளங்களை உறுதிப்படுத்தியது. ஓட்டலில் ஐ.இ.டி.,யை வைத்த பின் காணாமல் போன சந்தேக நபரால் கைவிடப்பட்ட ஒரு தொப்பி காவல்துறையை சென்னை மாலுக்கு அழைத்துச் சென்றது.
சந்தேக நபர்கள் தங்கள் தடங்களை மறைப்பதற்காக போலி அடையாளங்களைப் பயன்படுத்துவதில் முனைப்புடன் இருந்ததாக என்.ஐ.ஏ சுட்டிக்காட்டியுள்ளது.
'விக்னேஷ்' என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி குண்டுவெடிப்புக்கு முன்னதாக தாஹா பிப்ரவரியில் சென்னையில் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்ததாகவும், 'சுமித்' என்ற பெயரையும் பயன்படுத்தியதாகவும் என்.ஐ.ஏ சுட்டிக்காட்டியுள்ளது. ஷாசிப் சென்னையில் ‘முகமது ஜூனேட் சயீத்’ என்ற பெயரில் தங்கியிருந்தாக என்.ஐ.ஏ சுட்டிக்காட்டியுள்ளது.
தாஹா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வெகுமதி தருவதாக அறிவித்த நோட்டீஸில் என்.ஐ.ஏ, "அவர் இந்து அடையாள ஆவணங்களைப் பயன்படுத்துகிறார், விக்னேஷ் பெயரில் போலி ஆதார் அல்லது அடையாளத்தை மறைக்க பிற போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்துகிறார்" என்று கூறியது. ஷாசிப், தனது அடையாளத்தை மறைக்க “முகமது ஜூனேட் சயீத் என்ற பெயரில் போலி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்துகிறார்” என்று என்.ஐ.ஏ கூறியது.
பயங்கரவாத சதித்திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தும் போது தொலைபேசிகள், சிம் கார்டுகள், அடையாள ஆவணங்கள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகளைப் பயன்படுத்துவது பயங்கரவாதக் குழுக்கள் விசாரணையைத் தடம் புரள வைக்கும் பயங்கரவாத நடைமுறையாகக் கருதப்படுகிறது.
ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் 2020 முதல் நான்கு தனித்தனி பயங்கரவாத வழக்குகள் பதியப்பட்ட இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகள் குழுவின் ஷிவமொக்கா தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளனர். 2020 ஜனவரியில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசின் சித்தாந்தத்துடன் இணைந்ததாகக் கூறப்படும் நெட்வொர்க்கின் 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஷாசிப் மற்றும் தாஹாவின் பெயர்கள் முதலில் வெளிவந்தன.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெடிகுண்டு சோதனை வழக்குகளில், 2022 நவம்பரில் மங்களூருவில் தற்செயலான குண்டுவெடிப்பு மற்றும் 2020 டிசம்பரில் மங்களூரில் ஆத்திரமூட்டும் கிராஃபிட்டி வழக்கு என ஷிவமொக்கா தொகுதியைச் சேர்ந்த பத்து உறுப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்குகள் அனைத்திலும், ஐ.டி பொறியாளர் அப்துல் மதின் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகியோர் தொகுதியில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய நபர்களாக கர்நாடக காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
ஷிவமொக்கா ஐ.எஸ் குழுவின் முக்கிய உறுப்பினரான மாஸ் முனீர் அகமது, 25, செப்டம்பர் 2022 முதல் சிறையில் உள்ளார், மார்ச் 14 மற்றும் 21 க்கு இடையில் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்டார். ஒரு வாரம் விரிவாக விசாரிக்கப்பட்ட அகமது, குழுவின் முக்கிய இணைப்பாகக் கருதப்படுகிறார், மேலும் இந்த வழக்கிலும் பெயரிடப்பட வாய்ப்புள்ளது.
"கர்னல்" மற்றும் "பாய்" போன்ற பெயர்களில் அடையாளம் தெரியாத முக்கிய புள்ளி வழக்குகளில் வெளிப்பட்டுள்ளார். அனைத்து வழக்குகளையும் என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.