உத்திரபிரதேசத்தில் அனைத்து அரசு ஆவணங்களிலும் அம்பேத்கர் பெயரில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அம்மாநிலத்தின் ஆளுநர் ராம் நாயக் 2017ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அம்பேத்கர் பெயரில் ‘ராம்ஜி’ என்ற பெயரையும் இணைத்து “டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்று மாற்றக் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து உத்திரபிரதேச மாநில அரசிடம் பெயர் மாற்றத்தைப் பரிந்துரை செய்தார் ராம் நாயக். இந்த மாற்றத்தை ஏற்ற உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்பேத்கர் பெயருடன் ராம்ஜி பெயரை சேர்த்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இனி வரும் அனைத்து அரசு ஆவணங்களிலும் அம்பேத்கரின் பெயர், “டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்று மாற்ற உத்தரவிட்டார். இது தொடர்பான மற்றங்களை மாநில அரசு விரைவில் செய்தது.
அம்பேத்கர் பெயருடன் ராம்ஜி என்ற அவரின் தந்தை பெயரைச் சேர்ந்திருப்பதாக உ.பி அரசு கூறி வரும் நிலையில், இந்த அதிகாரப்பூர்வ தகவல் பெரும்பாலானோர் இடையே சர்ச்சையையும் மனவேதனையும் கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.