Ramnath Goenka Awards live updates President Kovind will present awards : பத்திரிகைத் துறையில் சிறந்த பத்திகையாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு மிக்க ராம்நாத் கோயங்கா விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை விருதுகளை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர் பத்திரிகைத் துறை அச்சமில்லாமலும் சார்பு இல்லாமலும் இருக்க வேண்டும் என்று பேசினார்.
2006ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும், பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது ராம்நாத் கோயங்கா மெமோரியல் ஃபௌண்டேசன். இந்திய ஊடகவியல் துறையில் இந்த விருது மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
பத்திரிக்கை, டிஜிட்டல் மீடியா மற்றும் சேனல்கள் மூலமாக மிகவும் சிறப்பு மிக்க செய்திகளை, கவனமாக தொகுத்து மக்களுக்கு வழங்கும் பத்திரிக்கையாளர்களுக்கான அங்கீகாரமாக இந்த விருது பார்க்கப்படுகிறது. இந்த வருடம் இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கினார்.
விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், “இப்போது ஊடகங்களை திண்ணும் ‘பிரேக்கிங் நியூஸ்’என்னும் நோய்க்குறி நிலவும் சூழலில், கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வு என்ற அடிப்படைக் கொள்கைகள் கணிசமாகக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தபட்டுள்ளது. போலி செய்திகள் ஒரு புதிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளன. அவற்றின் பாதுகாவலர்கள் தங்களை பத்திரிகையாளர்களாக அறிவித்துக்கொண்டு இந்த உன்னத தொழிலைக் களங்கப்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.
மேலும், “நல்ல இதழியலை தக்கவைத்துக்கொள்வது என்பது கடினமான சவாலாகும். அதே நேரத்தில் லாபகரமாகவும் இருக்க வேண்டும். ஊடகங்களின் ஒரு பிரிவினர் செய்திக்குப் பிறகு என்ற பெயரில் பொழுதுபோக்குக்கு வழிவகுத்துள்ளனர். பெரிய சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்தும் செய்தி கட்டுரைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அவற்றின் இடம் அற்ப விஷயங்களால் அகற்றப்படுகிறது” என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.
2018ம் ஆண்டில் பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கிய ஊடகவியலாளர்களுக்கு இன்று மாலை புதுடெல்லியில் தரப்படுகிறது ராம்நாத் கோயங்கா விருதுகள். மாவோய்ஸ்ட்டுகள் அதிகம் நடமாடும் மாநிலத்தில் உள்ள பஸ்தர் காடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தகவல்கள் முதல் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை தாக்குதல் வரை மிகவும் முக்கியமான பல்வேறு செய்திகளை வெளியுலகத்திற்கு கொண்டுவந்தவர்களுக்காக வழங்கப்பட்டது இந்த விருதுகள்.
இம்முறை பத்திரிக்கை (ப்ரிண்ட்), டிஜிட்டல் மற்றும் எலெக்ட்ரானிக் மீடியா, பிஸினஸ் மற்றும் பொருளாதாரம், அரசியல், மக்கள் தொடர்பான செய்திகள், சுற்றுச்சூழல், அறிவியல், மற்றும் தொழில்நுட்பம் பிரிவில் சிறந்து பணியாற்றிய பத்திரிக்கையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பத்திரிகைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பத்திரிகையாளர்களாக விளங்கியவர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருதுகளை வழங்கினார்.
ராம்நாத் கோயங்கா விருது இந்தி பிரிவில், திதி பாஜ்பாய், காவ்ன் இணைப்பு (அச்சு / டிஜிட்டல்); சதாப் அஹ்மத் மொய்ஜீ, தி க்விண்ட்.காம் (ஒளிபரப்பு) இருவருக்கும் வழங்கப்பட்டது.
பிராந்திய பிரிவில், பிராந்திய பிரிவில், அன்வேஷா பானர்ஜி, இஐ சாமே (அச்சு / டிஜிட்டல்); சனீஷ் டி.கே., மனோரமா செய்தி (ஒளிபரப்பு) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பதற்றமான பகுதிகளில் இருந்து செய்தி அனுப்பும் பிரிவில், திபங்கர் கோஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் (அச்சு / டிஜிட்டல்); தீரஜ் குமார், தூர்தர்ஷன் (ஒளிபரப்பு); மறைந்த அச்சுதா நந்தா சாஹு, தூர்தர்ஷன் (ஒளிபரப்பு); மோர்முகுட் சர்மா, தூர்தர்ஷன் (ஒளிபரப்பு)
சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செய்தி பிரிவில், மிருதுலா சாரி & வினிதா கோவிந்தராஜன், ஸ்க்ரோல்.இன் (அச்சு / டிஜிட்டல்); சர்வபிரியா சங்வான், பிபிசி செய்தி இந்தி (ஒளிபரப்பு) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
வணிக பிரிவில், நிதி வர்மா, தாம்சன் ராய்ட்டர்ஸ் (அச்சு / டிஜிட்டல்) ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
அன்கவர் இந்தியா இன்விசிபிள் பிரிவில், ஹினா ரோஹ்தகி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (அச்சு / டிஜிட்டல்); அஸ்மிதா நந்தி, தி க்விண்ட்.காம் (ஒளிபரப்பு); மேக்னாட் போஸ், தி க்வின்ட்.காம் (ஒளிபரப்பு) ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
புலனாய்வு இதழியல் பிரிவில், வெற்றியாளர்கள்: டீனா தாக்கர், மிண்ட் (அச்சு / டிஜிட்டல்); பூனம் அகர்வால், தி க்விண்ட்.காம் (ஒளிபரப்பு) ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
அரசியல் மற்றும் அரசு பிரிவில், சுஷாந்த் குமார் சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (அச்சு / டிஜிட்டல்); மௌமிதா சென், இந்தியா டுடே டிவி (ஒளிபரப்பு); ஷிகா, இந்தியா டுடே டிவி (ஒளிபரப்பு) ஆகியோருக்கு ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டது.
குடிமை இதழியல் பிரிவில், அனிருத்தா கோசலுக்கு நியூஸ் 18.காம் (அச்சு / டிஜிட்டல்) விருது வழங்கப்பட்டது.
புத்தகங்கள் (புனைவு அல்லாத) பிரிவில், கியான் பிரகாஷுக்கும் புகைப்பட பத்திரிகையாளர் பிரிவில், சி சுரேஷ் குமார், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (அச்சு / டிஜிட்டல்) ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டது.
விழாவில் தொடக்க உரையாற்றிய தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் விவேக் கோயங்கா, “நல்ல இதழியல் இன்னும் உயிருடன் இருப்பதற்கு விருது வழங்கும் விழா ஒரு சான்று என்று கூறினார். விருதுக்காக நடுவர்களால் 922 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அவர் கூறினார். “இதழியலில் மிகச்சிறந்தவர்களைப் பாராட்ட நாம் இங்கு வந்துள்ளோம். கற்றல் நல்ல இதழியலின் இதயம். நல்ல இதழியல் அனைத்தும் உயிருடன் இருக்கிறது என்பதற்கு இந்த மாலை ஒரு சான்று.” என்று கூறினார்.
அவரது உரையின் முழு வீடியோவை இங்கே பார்க்கலாம்:
போட்டியாளர்களில் இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தவர்கள் ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் டீன் டாம் கோல்ட்ஸ்டெய்ன், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, பத்திரிக்கையாளர் பமீலா பிலிப்போஸ் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா ஆவார்கள்.