Ramnath Goenka Awards: ராம்நாத் கோயங்கா விருது, இந்திய ஊடக உலகில் மிகுந்த மதிப்பு மிக்கது. ஊடகங்களில் சவாலான பணிகளை தைரியமாக ஆற்றியவர்கள், தனித்தன்மையுடன் சிறப்பாக பணியாற்றியவர்கள் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
Advertisment
2005-ம் ஆண்டு முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 13-ம் ஆண்டாக இன்று (ஜனவரி 4) மாலை டெல்லியில் இந்த விருது வழங்கும் விழா நடந்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகினார்.
அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் இருந்து 18 பிரிவுகளில் 29 வெற்றியாளர்கள் இந்த விருது மூலமாக கவுரவிக்கப்பட்டார்கள்.
ராம்நாத் கோயங்கா விருது பெற்ற பத்திரிகையாளர்களுடன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்த விழாவின் முன்னோட்டமாக, ‘மீ டூ’ தொடர்பாக குழு விவாதம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் தன்யா ராஜேந்திரன், மீனாள் பகல், ரிது கபூர், ரூபா ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் துணை ஆசிரியர் சீமா சிஸ்டி இதை ஒருங்கிணைத்தார்.
விழா லைவ் நிகழ்வுகளை இங்கு வீடியோவாக காணலாம்.
நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘எமர்ஜென்சி காலகட்டத்தில் ராம்நாத் கோயங்காவின் பணிகளைப் பற்றி கூறுவதானால், இருண்ட காலத்தில் ஒளி விளக்காக இருந்ததாக சொல்ல முடியும்.’ என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், ‘செய்திகளை சென்சேஷனல் ஆக்குவது, அந்தச் செய்தியை அவமதிப்பதற்கு சமம். ராம்நாத் கோயங்கா ஒருபோதும் அதை அனுமதிக்கவில்லை’ என்றார்.
Ramnath Goenka Awards: இந்தியன் எக்ஸ்பிரஸ் துணை ஆசிரியர் சீமா சிஷ்டி ஒருங்கிணைத்த குழு விவாதத்தில் ஊடகவியலாளர்கள் தன்யா ராஜேந்திரன், மீனாள் பகல், ரிது கபூர், ரூபா ஜா ஆகியோர்.
‘அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக மீடியா இருக்க வேண்டும். இந்த இரு அமைப்புகளும் நண்பர்களாக இருக்க முடியாது என்பதை நான் நம்புகிறேன். குற்றங்கள் யாரிடமும் நடக்கலாம். எனினும் அரசும் ஊடகங்களும் நண்பர்களாக இருக்காவிட்டாலும், எதிரிகளாக இருக்கக் கூடாது’ என்றார் ராஜ்நாத் சிங்.