இஸ்லாமிய சகோதரர்களால் ஆண்டுதோறும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அந்த நோன்பின் கடைசி நாளில் பிறை தெரிந்த மறுநாள் ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, நேற்றைய தினம் பிறை தெரியாததால் இன்று(16.6.18) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்தார்.
இதன் அடிப்படையில் நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள புதழ்பெற்ற ஜும்மா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தியா முழுவதும் இருக்கு பல்வேறு மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.
இதே போல் சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பிலும் இஸ்லாமிய நண்பர்கள், உறவினர்களுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டர் வலைப்பக்கத்தில் என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.