புதுச்சேரி மாநிலத்தில் அரசு பணி தேர்வில் எந்த அரசியல் தலையீடு கிடையாது என முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை நடந்த காவல்துறையில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழாவில் பணி பேசினார்.
புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் இன்று நடந்த காவலர் தேர்வில் பயிற்சியை முடிக்கப்பட்ட காவலர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா இன்று நடந்தது இதில் பணி ஆணை வழங்கிய ரங்கசாமி பேசியதாவது
பல ஆண்டுகளாக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
படித்த இளைஞர்கள் தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற எண்ணம் இருந்தது,
படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் ஆட்சியாளர்ளுக்கும் இன்று மகிழ்ச்சியான நாள். மேலும் காவல்துறையில் பேசி முடிக்கப்பட்ட காவலர்கள் இன்று பணி ஆணை வழங்கப்படுகிறது இதில்
காவல்துறை தேர்வில் அரசியல் தலையீடு இல்லை, திறமை இருந்தால் பணி கிடைக்கும். மேலும் புதுச்சேரி மாநிலத்தில்
காலியாக உள்ள 456 மேல்நிலை மற்றும் கீழ் நிலை எழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாநிலம் பொதுமக்களுக்கு மாணவச் செல்ல மாணவச் செல்வங்களுக்கு
கல்வியை கொடுப்பதில் முதன்மையான மாநிலமாக புதுச்சேரி உள்ளது.
அரசு பணியிடங்கள் மட்டுமின்றி புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
காவல்துறையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - என முதல்வர் பேசினார் .
விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில்
முதல்வர் ரங்கசாமி தலைமையில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது- இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய காவலர்கள் தங்கள்
கடமை உணர்வு மற்றும் மனித நோயத்துடன் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காவலர்கள் பணி செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலம்
சுகாராதம், கல்வி , காவல்துறை ஆகிய துறைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது.
எவ்வளவு நிதி கேட்டாலும் காவல்துறைக்கு ஒதுக்கித்தருகிறார் முதல்வர் ரங்கசாமி, எனவே காவலர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.
புதுச்சேரி மாநிலம் பல வகையில் முனேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது, 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
500 ஊர்க்காவல் படை வீரர்கள், 60 உதவி ஆய்வாளர், 200 கடலோர பாதுகாவலர்கள் நிரப்பபட உள்ளது.
முதல்வர் தலைமையில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது, நல்ல முன்னேற்றத்தை நோக்கி புதுச்சேரி சென்று கொண்டிருக்கிறது- இவ்வாறு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். பேசினார் விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”