பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி இன்று டெல்லி புறப்பட்டார் நட்டா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., லோக் ஜனசக்தி, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு கட்சியின் தலைவர் நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல புதுவையில் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு தலைமை வகிக்கும் என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் கலந்து கொள்ள முதல்வர் ரங்கசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார் மாலை இந்தக் கூட்டம் நடக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"