மருந்து பொருட்கள் தீங்கு குறைப்பு கூட்டமைப்பால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட முதல் உலகளாவிய மருந்துக் கொள்கை அட்டவணையில், நார்வே, நியூசிலாந்து, போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை மனிதாபிமான மற்றும் ஆரோக்கியம் சார்ந்த மருந்துக் கொள்கைகளில் 5 முன்னணி நாடுகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேசில், உகாண்டா, இந்தோனேசியா, கென்யா மற்றும் மெக்சிகோ ஆகிய 5 நாடுகள் தரவரிசையில் மிகவும் கீழே உள்ளன. தரவரிசைப் பட்டியலில் 30 இந்தியா 18வது இடத்தில் உள்ளது.
இந்த குறியீடு என்பது என்ன: இது மருந்துக் கொள்கைகள் மற்றும் அவற்றை செயல்படுத்தல் பற்றிய தரவு சார்ந்த உலகளாவிய பகுப்பாய்வு ஆகும். இது போதைப்பொருள் கொள்கையின் 5 விரிவான பரிமாணங்களில் இயங்கும் 75 குறியீடுகளைக் கொண்டுள்ளது: குற்றவியல் நீதி, தீவிர பதில்கள், உடல்நலம் மற்றும் தீங்கு குறைப்பு, சர்வதேச அளவில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கான அணுகல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகிறது.
இது தீங்கு குறைப்பு கூட்டமைப்பின் ஒரு திட்டம். இதில் பின்வரும் பங்குதாரர்கள் உள்ளடக்கியுள்ளனர். மருந்துகளை பயன்படுத்தும் நபர்களின் ஐரோப்பிய நெட்வொர்க் (EuroNPUD), யூரேசிய தீங்கு குறைப்பு சங்கம் (EHRA), மருந்துகளை பயன்படுத்தும் நபர்களின் யூரேசிய நெட்வொர்க் (ENPUD), உலகளாவிய மருந்து கொள்கை கண்காணிப்பகம் (GDPO) / ஸ்வான்சீ பல்கலைக்கழகம், தீங்கு குறைப்பு சர்வதேச அமைப்பு (HRI), சர்வதேச மருந்துக் கொள்கை கூட்டமைப்பு (IDPC), மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா தீங்கு குறைப்பு சங்கம் (MENAHRA), மேற்கு ஆப்பிரிக்க மருந்துக் கொள்கை நெட்வொர்க் (WADPN), பெண்கள் மற்றும் தீங்கு குறைப்பு சர்வதேச நெட்வொர்க் (WHRIN), மற்றும் யூத் ரைஸ் ஆகிய அமைப்புகள் அடங்கியுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் தரவரிசை:
தரவரிசை: நார்வே, குறியீட்டில் முதலிடத்தில் இருந்த போதிலும், 74/100 மதிப்பெண்களை மட்டுமே பெற முடிந்தது. இதில் 30 நாடுகளின் சராசரி மதிப்பெண் வெறும் 48/100 மட்டுமே. “100க்கு 48 மதிப்பெண் என்பது மருந்துக் கொள்கை அனைத்து நாடுகளும் தோல்வி என்று பதிவு செய்துள்ளன. மதிப்பிடப்பட்ட நாடுகள் மருந்துக் கொள்கையில் தங்கள் மதிப்பெண்ணைப் பற்றி திருப்தியாக உணரவில்லை. ஏனெனில், எந்த நாடும் சரியான மதிப்பெண்ணை எட்டவில்லை. அல்லது அவை திருப்தியான மதிப்பெண்ணுக்கு அருகே இருக்கலாம்” என்று சர்வதேச மருந்துக் கொள்கை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆன் ஃபோர்டாம் கூறினார். இது தீங்கு குறைப்பு கூட்டமைப்பில் பங்குதாரர்களுடன் குறியீட்டை உருவாக்க வழிவகுத்துள்ளது.
இந்தியா மொத்த மதிப்பெண் 46/100 பெற்றுள்ளது. தீவிர தண்டனை மற்றும் நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான அளவுகோல்களில், இந்தியா 63/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. உடல்நலம் மற்றும் தீங்கு குறைப்பு அளவுகோல்களில் 49/100 மதிப்பெண் பெற்றுள்ளது. மருந்து கொள்கைகள் தொடர்பான குற்றவியல் நீதி நடவடிக்கை செயல்பாடுகளில் 38/100 மதிப்பெண் பெற்றுள்ளது. வலி மற்றும் துன்பத்தின் நிவாரணத்திற்காக சர்வதேச அளவில் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் கிடைக்கும் தன்மை மற்றும் அணுகல 33/100 மதிப்பெண் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”