என் செய்கைகளால் வெட்கப்படுகிறேன் : பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா
Chinmayanad arrested by SIT : என் செய்கைகளால் வெட்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தா தெரிவித்ததாக சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
என் செய்கைகளால் வெட்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தா தெரிவித்ததாக சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
Advertisment
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு இன்று கைது செய்தது.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 15ம் தேதி, புகாரளித்த மாணவியிடம் 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (SIT) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றிவரும் 2 முதல்வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து சின்மயானந்தாவிடம் 7 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தியது.
இந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் இன்று ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். பின்னர், அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்மயானந்தா கைது செய்யப்பட்டதையொட்டி அவரது வீடு மற்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் அரசு மருத்துவமனை, நீதிம்ன்றம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற நோயாளிகள் கடுமையான பரிசோதனைக்கு பிறகே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.