Advertisment

தகவல்களை வழங்க மறுக்கும் அமெரிக்க டெக் நிறுவனங்கள்; சிக்கலில் ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கு

ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ விசாரணையில் முன்னேற்றம் இல்லை; அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தரவுகளை பகிர்ந்து கொள்ளவில்லை என்று டெல்லி போலீஸ் தகவல்

author-image
WebDesk
New Update
Rashmika and Zara

ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ விசாரணையில் முன்னேற்றம் இல்லை; அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தரவுகளை பகிர்ந்து கொள்ளவில்லை என்று டெல்லி போலீஸ் தகவல்

Jignasa Sinha

Advertisment

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான விசாரணையில், அந்த வீடியோ யாருடைய இணையதளங்களில் பகிரப்பட்டதோ அந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான விவரங்களை வழங்காததால் விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆங்கிலத்தில் படிக்க: Rashmika Mandanna deepfake video probe hits a wall: US tech firms not sharing data, say Delhi Police

ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நவம்பர் 10 ஆம் தேதி வழக்கை எடுத்துக்கொண்டது. அசல் வீடியோவில் வேறொரு பெண் கருப்பு உடையில் லிப்டில் நுழைந்து ரீல்ஸ் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர், வீடியோவில் உள்ள பெண்ணின் முகத்தில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மார்பிங் செய்ய AI எடிட்டிங்கைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடக நிறுவனமான மெட்டா மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான GoDaddy க்கு பல கோரிக்கைகள் மற்றும் கடிதங்கள் வைத்தப்போதிலும், அந்த அமெரிக்க நிறுவனங்கள் தேவையான விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்று சைபர் செல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பீகாரைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு சாதனத்தை கைப்பற்றியதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். AI கருவியைப் பயன்படுத்தி டீப்ஃபேக்கை உருவாக்க சந்தேக நபர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் ரீலின் URL மற்றும் விவரங்களை போலீசார் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

வீடியோ மற்றும் சுயவிவரங்கள்/ கணக்குகள் (வீடியோவைப் பகிர்ந்தவை) பற்றிய தகவல் தொடர்பான காவல்துறையின் முதல் மற்றும் இரண்டாவது முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், தகவலுடன் மெட்டா பதிலளித்ததாகவும் ஒரு வட்டாரம் கூறியது. இருப்பினும், போலீசார் URL கேட்டு அனுப்பிய மூன்றாவது மேல்முறையீடு ஏற்கப்படவில்லை.

இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீலின் URL ஐ மெட்டா அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் சம்பந்தப்பட்ட கணக்கிற்கான தரவு இல்லை என்று எங்களிடம் கூறினர். சந்தேக நபர் கணக்கு மற்றும் தகவலை நீக்கிவிட்டதாக அவர்களிடம் தெரிவித்தோம், மேலும் அவர்களின் பழைய தரவுகளை எங்களிடம் ஒப்படைக்க முடியுமா என்று கேட்டோம். அவர்கள் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. இதேபோல், GoDaddy.com இல் ஹோஸ்ட் செய்யப்பட்ட ஒரு URL ஐக் கண்டறிந்தோம், மேலும் அந்த இணையதளத்தில் எங்களுக்கு உதவ அவர்களின் குழுவுக்கு ஒரு கடிதம் அனுப்பினோம், ஆனால் அவர்களும் URLக்கான பதிவுகள் இல்லை என்று பதிலளித்தனர். இவை பொதுவாக பழைய டேட்டாவைச் சேமிக்கும் நிறுவனங்கள்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

ஒரு மெட்டா செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர்கள் டெல்லி காவல்துறைக்கு ஒத்துழைப்பதாகக் கூறினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு GoDaddy பதிலளிக்கவில்லை.

இதற்கிடையில், டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கியவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், வீடியோவைப் பகிர்ந்த நபர்களை மட்டுமே காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட கணக்கிற்கு போலி அடையாளம் மற்றும் VPN ஐப் பயன்படுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன, தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐ.பி முகவரிகள் மற்றும் பயனரின் பிற தகவல்களின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டதால் தான் அதை டிகோட் செய்ய முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுதில்லியில் உள்ள டெல்லி காவல்துறையின் தலைமையகத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆன்லைன் பாதுகாப்பு டிஜிட்டல் எழுத்தறிவு திட்டம்என்ற நிகழ்ச்சியை மெட்டா நடத்தியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் துன்புறுத்தலைத் தடுக்க மெட்டாவுடன் நெருக்கமாக பணியாற்றுவதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் முகங்கள் உட்பட பல டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் ஆடியோ வழக்குகள் கடந்த மாதத்தில் வெளிவந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் G20 நாடுகளின் காணொலி உச்சிமாநாட்டில் AI இன் விதிமுறைகள் குறித்து தனது கவலைகளை வெளிப்படுத்தினார் மற்றும் டீப்ஃபேக் சமூகத்திற்கு "ஆபத்தானது" என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Delhi Facebook rashmika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment