பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை பிற்பகலில், ரத்தன் டாடாவுக்கு ஏற்பட்ட இரத்த அழுத்தம் காரணமாக அவர் மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தான் நலமுடன் இருப்பதாகவும், யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், ரத்தன் டாடா உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபரும், மனிதநேயமிக்கவருமான ரத்தன் டாடா, ஜம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் ஆவார், அவர் 1991 முதல் 2012 வரை மற்றும் 2016 முதல் 2017 வரை இரண்டு முறை டாடா குழுமக் குழுமத்தின் தலைவராக இருந்தார். தற்போது, அவர் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் இருந்து வெகு காலத்திற்கு பின் விலகியிருந்தாலும், அதன் அறக்கட்டளைகளுக்கு அவர் தொடர்ந்து தலைமை தாங்கி வருகிறார். 2008 இல், அவர் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷணைப் பெற்றார். அவர் 2000 ஆம் ஆண்டில் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷன் பெற்றார்.
ரத்தன் டாடா, 13 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடனும், இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடனும், அவர் இந்தியாவில் அதிகமாகப் பின்தொடரும் தொழிலதிபராக இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“