பி.எம்., கேர்ஸ் அறங்காவலராக டாடா நிறுவனங்களின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முடிவு செவ்வாய்க்கிழமை பி.எம். கேர்ஸ் பிரதமர் மோடி எடுத்துள்ளார்.
மேலும், PM CARESக்கான ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கு மூன்று பெயர்களை பரிந்துரைத்தது. அவர்கள் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி மற்றும் டீச் ஃபார் இந்தியாவின் இணை நிறுவனரும் இண்டிகார்ப்ஸ் மற்றும் பிரமல் அறக்கட்டளையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆனந்த் ஷா ஆகியோர் ஆவார்கள்.
இதைத் தொடர்ந்து, புதிய அறங்காவலர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்கேற்பானது, 'பிஎம் கேர்ஸ் ஃபண்டின் செயல்பாட்டிற்கு பரந்த முன்னோக்குகளை' வழங்கும், ஏனெனில் அவர்களின்' பரந்த பொது வாழ்க்கை அனுபவம், பல்வேறு பொதுத் தேவைகளுக்கு நிதியை மிகவும் பதிலளிக்கக்கூடியதாக மாற்றுவதில் மேலும் வீரியத்தை அளிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சந்திப்பின் போது, இந்த நிதிக்கு முழு மனதுடன் பங்களித்த குடிமக்களை பிரதமர் மோடி பாராட்டினார். குழந்தைகளுக்கான PM CARES திட்டம் உட்பட PM CARES நிதியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த விளக்கக்காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றின் போது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி "பிஎம் கேர்ஸ்' என்ற நிதியத்தை அறிவித்தார்.
இதற்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள், நன்கொடைகள் அளித்து வருகிறார்கள். இந்த நிதியின் மூலம் நாட்டில் பல தரப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி தலைமையில் பி.எம். கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டத்தின்போது, பிரதமர் மோடி இந்தத் திட்டத்தில் முழுமனதுடன் பங்களிப்பு செய்தவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்த பிஎம் கேர்ஸ் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil