scorecardresearch

பூரி ஜெகநாதர் கோயில் அதிகாரிகளின் இரவு தூக்கத்தைக் கெடுத்த எலிகள்

கோயில் மூடப்பட்ட பின் இரவில் எலிகளின் தொல்லை அதிகமாகிறது. பொதுவாக கோயில் கருவறை மேலே ஒளிந்து கொள்ளும் எலிகள் கீழே இறங்கி வந்து அட்டகாசம் செய்கிறது.

Puri Jagannath temple, Puri Jagannath, Puri Jagannath temple Rats, rat menace Puri Jagannath temple, Puri Jagannath temple ticket, Indian express
பூரி ஜெகநாதர் கோயில்

பூரி ஜெகநாதர் கோயில் அதிகாரிகளுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுக்கும் எலிகள் தெய்வங்களின் மர சிலைகள் சேதமடைவதைத் தடுக்க விரைவான நடவடிக்கை எடுக்க கோயில் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூரி ஜெகநாதர் கோயிலில் யாரோ அதிகாரிகளுக்கு எலிகள் தூக்கத்தைக் கெடுத்து, தூக்கமில்லா இரவுகளைக் கொடுக்கிறது. சமீபத்தில் பாலபத்திரர், மற்றும் சுபத்ரா தேவியின் ஆடைகளை கடித்து சேதப்படுத்திய எலிகள் தெய்வங்களின் மரச் சிலைகளையும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

கோயிலில் திங்கட்கிழமை கசபத சடங்கை தொடங்க இருந்தபோது, ​​​​முக்கிய சடங்குகளை நடத்தும் தைதாபதி சேவகர், எலிகள் தெய்வங்களின் ஆடைகளை சேதப்படுத்தியதைக் கண்டுபிடித்தனர். மாலைகளைக் கடித்து ரத்ன சிங்கசனின் (புனித பீடத்தில்) வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டன. கோயில் கருவறை எலி சிறுநீர், எச்சங்களால் நிறைந்திருந்தது.

திங்கட்கிழமை சடங்கின் ஒரு பகுதியாக இருந்த மூத்த சேவகர் பினாயக் தஸ்மோஹபத்ரா, “தெய்வங்களின் புனித மர சிலைக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால், எலிகள் உடைகள், மலர்கள் மற்றும் துளசி இலைகளை சேதப்படுத்தியது” என்று கூறினார்.

கோயில் மூடப்பட்ட பின் இரவில் எலிகளின் தொல்லை அதிகமாகும். பொதுவாக புனித பீடத்திற்கு மேலே ஒளிந்து கொள்ளும் எலிகள் கீழே இறங்கி அட்டகாசம் செய்கின்றன.

திங்கள்கிழமை சடங்குக்கு வந்திருந்த மற்றொரு பணியாளரான ராமச்சந்திர தாஸ்மோஹபத்ரா கூறுகையில், “இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கோயில் நிர்வாகத்தை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று கூறினார்.

தெய்வங்களின் மரச் சிலையை எலிகள் சேதப்படுத்துவது குறித்து சேவகர்களின் கவலைக்கு பதிலளிக்கும் வகையில், ஜெகநாதர் கோயில் நிர்வாகம் (எஸ்.ஜே.டி.ஏ) அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உறுதியளித்தனர். “தெய்வங்கள் வழக்கமாக சந்தனம் மற்றும் கற்பூரத்தால் மெருகூட்டப்படுகின்றன” என்று எஸ்.ஜே.டி.ஏ அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒடிசாவின் மிகவும் பிரபலமான மதத் தளத்தைப் பராமரிக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) தலையீட்டிற்கு அழைப்பு விடுத்த தஸ்மோஹபத்ரா, 9 நாள் ரத யாத்திரைக்கு முன்னர் எலிகளை சன்னதியில் இருந்து அகற்ற கோயில் நிர்வாகமும் மத்திய அமைப்பும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்றார்.

கோயிலைப் பாதுகாப்பதே ஏஎஸ்ஐயின் பணி என்று கூறிய திபிஷாதா பி கர்நாயக், “எலிகளை ஒழிக்க பராமரிப்பு தொடர்பான ஏதேனும் தேவை இருந்தால், ரத யாத்திரையின் போது வருடாந்திர பராமரிப்புப் பணிகளின் போது அதை மேற்கொள்ளலாம்.” என்று கூறினார்.

கருவறைக்குள் பல எலிகளும் கரப்பான் பூச்சிகளும் இருப்பதால் வழிபாடு செய்வதில் சிரமம் இருப்பதாக தினமும் காலையில் தெய்வங்களுக்கு அலங்காரம் செய்யும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சேவகர் ஒருவர் கூறுகையில், “கோயிலில் எலி, கரப்பான் பூச்சி பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.” என்று கூறினார்.

பூரி கோவிலில் எலி அச்சுறுத்தல் ஒன்றும் புதிதல்ல என்றாலும், தொற்றுநோய் காரணமாக சன்னதி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு தடுப்புகள் இல்லாத நிலையில் இருந்தபோது எலிகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்தது.

சடங்குகள், பணிகள் மற்றும் பொறுப்புகளை விவரிக்கும் கோயில் உரிமைகள் ஆவணம், எலிகள், குரங்குகள், புறாக்கள் போன்ற பிற உயிரினங்களின் அச்சுறுத்தலைக் கையாள்வது பற்றி பேசுகிறது. எலிகளைக் கொல்வதை கோயில் உரிமைகள் ஆவணம் தடை செய்வதால், நிர்வாகம் அவற்றை உயிருடன் பிடிக்க பொறிகளை வைத்து, பின்னர் அவற்றை கோயில் வளாகத்திற்கு வெளியே விடுவிக்கிறது.

இந்த அச்சுறுத்தலை சமாளிக்க கோயில் நிர்வாகம் சமீபத்தில் வித்தியாசமான வழியைக் கையில் எடுத்தது. அது ஒரு பக்தரால் நன்கொடையாக அளிக்கப்ப்பட்ட ஒரு இயந்திரத்தை நிறுவியது. அது எலிகளை விரட்ட ஒலியைப் பயன்படுத்தியது. இருப்பினும், இயந்திரத்திலிருந்து வரும் ஒலி சகோதரி தெய்வங்களின் தூக்கத்தைக் கெடுக்கிறது என்று பணியாளர்கள் கூறியதை அடுத்து அந்த இயந்திரம் அகற்றப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rats giving sleepless nights to puri jagannath temple authorities in odisha