Indian cricketer Ravindra Jadeja wife Rivaba Solanki Total assets – wealth Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்-ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ரீவா சோலங்கியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

32 வயதான ரிவாபா ஜடேஜா மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இவர் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்த பிரதமர் மோடிக்கும், பாஜகவின் மேலிடத்திற்கும் ஜடேஜா சமீபத்தில் நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
Jai hind 🇮🇳 pic.twitter.com/JWdbV0brab
— Ravindrasinh jadeja (@imjadeja) November 10, 2022
ரிவாபா ஜடேஜா சொத்து மதிப்பு எவ்வளவு?
இந்நிலையில், குஜராத் தேர்தலில் களமாடும் ஜடேஜா மனைவி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது சொத்து மற்றும் அவரது குடும்ப சொத்து என்று அவரே குறிப்பிட்ட விபரங்களை இங்கு பார்க்கலாம்.

மொத்த சொத்து மதிப்பு (குடும்பத்துடன்): ரூ.97.35 கோடி
ரவீந்திர ஜடேஜாவின் சொத்து மதிப்பு: 70.48 கோடி
அசையும் சொத்துக்களின் மதிப்பு : ரூ.64.3 கோடி
சுய சொத்து : ரூ 57.60 லட்சம்
கணவரின் சொத்து : ரூ.37.43 கோடி
கும்ப சொத்து : ரூ 26.25 கோடி
அசையா சொத்துகள்: ரூ.33.05 கோடி
சுய சொத்து: இல்லை
கணவரின் சொத்து: ரூ 33.05 கோடி (ராஜ்கோட் – ஜாம்நகரில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள்; ராஜ்கோட்டில் உள்ள ஜட்டுஸ் ஃபுட் ஃபீல்ட் உணவகத்தில் 50% பங்குகள்; ராஜ்கோட், ஜமாங்கர் மற்றும் அகமதாபாத்தில் உள்ள ஆறு வீடுகள்)

வாகனங்கள்:
கணவர் ஜடேஜாவிடம் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி (ரூ. 9.72 லட்சம்), ஃபோர்டு எண்டெவர் (ரூ. 23.5 லட்சம்) மற்றும் ஆடி க்யூ7 (ரூ. 76.5 லட்சம்)
குற்ற வழக்குகள்: எதுவும் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil