கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, குஜராத்தின் ஜாம்நகர் வடக்கில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரை பூர்வீகமாகக் கொண்டவர்.
இந்தத் தம்பதியர் 100 கிமீ தொலைவில் உள்ள ராஜ்கோட்டில் உணவகம் ஒன்றை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலிலேயே ரிவாபாவின் பெயரும் இடம்பெற்றது உள்ளூர் பாஜகவினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிவாபாவும் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் கவனம் செலுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
குறிப்பாக பெண்கள் மத்தியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகித்தார்.
மேலும் பெண் குழந்தைகளுக்கான அஞ்சல் சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளைத் திறக்க உதவுகிறார்.
இந்த ஆண்டு ஆகஸ்டில், ரிவாபா தனது கணவருடன் இணைந்து நடத்தும் ஸ்ரீ மாத்ருசக்தி அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இதுபோன்ற 101 கணக்குகளைத் திறக்க உதவியுள்ளார்.
எனினும் அவர் தற்போதைய எம்.எல்.ஏ.வின் கோபத்தையும், உள்ளூர் நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இன்மையையும் எதிர்கொளள நேரிடும் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக 2016ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா, ரிவாபா நட்சத்திர தம்பதியர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் 2018ஆம் ஆண்டு சந்தித்தனர்.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரிவாபா பாஜகவில் இணைந்தார். தற்போது அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil