MA வரலாறு படித்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியையும் வரலாறாக மாற்றமாட்டார் என நம்புவோம் - பாஜக தலைவர்

மத்திய அரசின் தவறான முடிவினை சுட்டிக்காட்டி ட்விட்டரில் ட்ரோல் செய்த முன்னாள் அமைச்சர்

மத்திய அரசின் தவறான முடிவினை சுட்டிக்காட்டி ட்விட்டரில் ட்ரோல் செய்த முன்னாள் அமைச்சர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RBI New Governor Shaktikanta Das

RBI New Governor Shaktikanta Das

RBI New Governor Shaktikanta Das : வங்கிகளில் வாராக்கடன் அதிகமானதிற்கு ஆர்.பி.ஐ தான் காரணம் என மத்திய அரசு ஆர்.பி.ஐ மீது குற்றச்சாட்டினை வைத்தது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய சொந்த காரணங்களுக்காக வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உர்ஜித் படேல்.

Advertisment

மேலும் படிக்க : ஆர்.பி.ஐ ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் உர்ஜித் படேல்

ஆர்.பி.ஐ  ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றார்.  சக்திகாந்த தாஸ் இதற்கு முன்பு எந்த ஒரு வங்கி நிர்வாகத்திலும் பணி புரிந்தது கிடையாது. அவர் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எந்த தகுதிகளின் அடிப்படையில் இவர் ஆளுநராக்கப்பட்டார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்ட வண்ணம் தான் இருந்தது.

RBI New Governor Shaktikanta Das நியமனம் குறித்து ட்ரோல் செய்த பாஜக அமைச்சர்

Advertisment
Advertisements

குஜராத் மாநிலத்தில், நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, அங்கு அமைச்சராக பதவி வகித்தவர் ஜெய் நாராயண் வியாஸ். சக்திகாந்த தாஸ் நியமனத்தை கேள்வி கேட்கும் வகையில் ஒரு ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருக்கிறார்.

அதில் “ஆர்.பி.ஐயின் புதிய கவர்னாரக பதவியேற்றிருக்கும் தாஸ் அவரின் கல்வியானது எம்.ஏ ஹிஸ்ட்ரி. அவர் ஆர்.பி.ஐயையும் வரலாறாக மாற்றிவிடமாட்டார் என்று நம்புவோம். பிரார்த்தனை செய்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாஜக தலைவர் ஒருவர், மத்திய அரசின் தவறான தேர்வினை சுட்டிக்காட்டும் வகையில் ட்வீட் செய்திருப்பது பாஜகவினர் மத்தியில் சலசலப்பினை உருவாக்கியுள்ளது.

சக்திகாந்த தாஸ் மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளரும், மத்திய நிதிக்குழுவின் உறுப்பினருமாக பதவி வகித்தார். பணமதிப்பிழக்க நீக்கத்தின் போது தன்னுடைய முழுமையான ஆதரவினை அரசிற்கு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: