scorecardresearch

‘நிலையான, உறுதியான வளர்ச்சி’.. இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்: சீனா திடீர் மனமாற்றம்

இருதரப்பு உறவுகளை மேம்படுத்த மற்றும் நிலையான, உறுதியான வளர்ச்சி பெற இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீனா தெரிவித்துள்ளது.

‘நிலையான, உறுதியான வளர்ச்சி’.. இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்: சீனா திடீர் மனமாற்றம்

இந்திய மற்றும் சீன ராணுவத் தளபதிகளுக்கு இடையிலான சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, இருதரப்பு உறவுகளின் நிலையான மற்றும் வலுவான வளர்ச்சிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாடு கோட்டில் நிலவும் பிரச்சினை மற்றும் டிசம்பர் 9 அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவத் தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

2022-ம் ஆண்டின் சர்வதேச சூழ்நிலை மற்றும் சீனாவின் வெளிநாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்கில் பேசிய வாங் யி, சீனாவும் இந்தியாவும் ராஜதந்திர மற்றும் ராணுவ வழிகள் மூலம் தொடர்பை பேணி வருகின்றன, மேலும் இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளன. சீனா-இந்தியா உறவுகளின் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை நோக்கி இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.

இந்தியாவும் சீனாவும் இதுவரை 17 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 17-வது சுற்றுக்குப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பேச்சுவார்த்தைகள் “வெளிப்படையாகவும் ஆழமாகவும்” இருந்தன. இரு நாடுகளின் தலைவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணும்படி இருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்குத் துறையில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அது கிழக்கு லடாக் பகுதியைக் குறிப்பிடுகிறது.

லடாக்கில் டெப்சாங்கில் சீனப் படைகள் இருப்பது பதற்றத்தை நீடிக்கிறது. டெப்சாங் படைகள் மற்றும் பாங்காங் த்சோவின் மீது இரண்டு பாலங்கள் உட்பட விரைவான சீன உள்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றால் லடாக்கில் பதற்றம் நீடிக்கிறது.

பேச்சுவார்த்தையின் போது சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நேரடியாக பதிலளிக்கவில்லை. நம் அனைவரிடமும் யூகங்கள் இருக்கலாம். ஆனால் என்னிடம் உறுதியான தகவல் இல்லை. அதனால் அதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் மேற்கத்திய பகுதி பிரச்சனை பற்றி நாங்கள் பேசினோம் என்று கூறினார்.

டிசம்பர் 9-ம் தேதி அதிகாலை அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்திய மற்றும் சீன ராணுவப் படைகள் மோதிக்கொண்டன. குச்சிகள், கம்புகள் கொண்டு மோதிக் கொண்டன. முன்னதாக ஜூன் 2020 கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Ready to work with india for steady sound growth of bilateral ties china