Advertisment

முலாயம், எஸ்.எம் கிருஷ்ணா... பத்ம விருது பட்டியலில் அரசியல் தலைவர்கள்; பின்னணி என்ன?

பாஜக அதிக கவனம் செலுத்தி வரும் மாநிலங்களில் ஒன்றாக இருந்து வரும் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து தூணோஜம் சாவோபா சிங்கும் பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார்.

author-image
WebDesk
New Update
Reason behind political leaders in Padma list Tamil News

The Narendra Modi government Wednesday scored several political points with its Padma list.

Padma awards 2023 Tamil News: மத்திய அரசால் பல்வேறு துறை வல்லுநர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இன்று (ஜன. 26) 74ஆவது இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுக்கு பல துறைகளை சார்ந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த பத்ம விருதுகள் வழங்கும் பட்டியலில் கர்நாடகத் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் மறைந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகிய பல அரசியல் புள்ளிகளின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. சட்டசபை தேர்தல் நடத்தப்படும் கர்நாடகாவில் சக்திவாய்ந்த வொக்கலிகா சமூகத்தின் தலைவராக உள்ளார். அதே நேரத்தில் முலாயம் சிங் ஓ.பி.சி (OBC) -கள் மத்தியில் நாட்டிலேயே மிகவும் மதிக்கப்படும் பெயர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த விருதுகளை வழங்குவதன் மூலம் பாஜக அவர்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கிறது. இதேபோல், திரிபுரா பழங்குடியினரான என்.சி டெப்பர்மா மாநிலத்தில் வாக்களிக்க சில நாட்களுக்கு முன்னதாக பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார்.

தற்போது பாஜக அதிக கவனம் செலுத்தி வரும் மாநிலங்களில் ஒன்றாக இருந்து வரும் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து தூணோஜம் சாவோபா சிங்கும் பத்மஸ்ரீ விருதைப் பெறுகிறார்.

எஸ் எம் கிருஷ்ணா

தனது 90வது வயதில் இருந்து வரும் எஸ் எம் கிருஷ்ணா, சமீப ஆண்டுகளில் அரசியல் நம்பகத்தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான இவர், மாநிலத்தில் முன்னாள் பிரதமரும் JD(S) தலைவருமான H D தேவகவுடாவுக்குப் பிறகு மிக முக்கியமான வொக்கலிகா தலைவராகக் கருதப்படுகிறார்.

தேவகவுடா சமூகத்தின் அடிமட்டத் தலைவராகத் தெரிந்தால், கிருஷ்ணா எப்போதும் தனது வெளிநாட்டுக் கல்வியால் நகர்ப்புற முகமாகவே காணப்பட்டார். மேலும் பெங்களூரூ நகரின் வளர்ச்சிக்காக அவர் இன்றும் பரவலாக அறியப்படுகிறார்.

காங்கிரஸில் ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, அவர் முதல்வர், வெளியுறவு அமைச்சர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் போன்ற உயர் பதவிகளில் பணியாற்றினார். அதன்பிறகு கிருஷ்ணா 2017ல் பாஜகவில் சேர்ந்தார். இது அக்கட்சி தெற்கு கர்நாடகாவில் காலூன்றுவதற்கான முயற்சியாகப் பார்க்கப்பட்டது. மற்றும் ஆதிக்கம் செலுத்தும் வொக்கலிகாக்கள் மத்தியிலும் பரவலாக அறியப்பட்டார். இந்த நடவடிக்கை பாஜக-வுக்கு எந்தவொரு தீவிரமான அரசியல் பலனையும் அளிக்கவில்லை. ஆனால் இந்த மாதம் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த கிருஷ்ணாவுக்கு கிடைத்த மரியாதை அவரது சமூகத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019ல் அவரது மருமகனும், கஃபே காபி டே நிறுவனருமான வி ஜி சித்தார்த்தாவின் மரணம் கிருஷ்ணாவுக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது ஓய்வு பற்றி பேசுகையில், “நான் அதிகம் (பொதுவெளியில்) காணப்படவில்லை என்பது பற்றிய விவாதங்களை நான் அறிந்தேன். நாம் அனைவரும் நம் வயதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். 90 வயதில், 50களில் இருப்பது போல் செயல்பட முடியாது. அந்த வயதைக் கருத்தில் கொண்டு, பொது வாழ்வில் இருந்து படிப்படியாக ஒதுங்கி வருகிறேன்" என்று கூறியிருந்தார்.

கிருஷ்ணா இப்போது பாஜகவில் இருக்கும்போது, ​​தற்செயலாக அவரது பினாமியாகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் கருதப்படுகிறார். அவர் கட்சியின் முதல்வர் முகம் தொடர்பாக சக சித்தராமையாவுடன் மோதலில் இருக்கிறார்.

முலாயம் சிங் யாதவ்

கடந்த ஆண்டு அக்டோபரில் தனது 82 வயதில் இறந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், ராம் மனோகர் லோஹியாவின் சீடராகவும், உத்தரபிரதேசத்தில் ஓபிசி அரசியலின் சிற்பியாகவும் இருந்து, எட்டு முறை மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஏழு முறை எம்பியாக பணியாற்றினார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சராகவும் மூன்று முறை உத்தரபிரதேச முதல்வராகவும் இருந்தார்.

உத்தரபிரதேசத்தில் நீண்ட காலமாக பாஜக செய்து வந்த "ராமர் கோவில்" அரசியலுக்கு எதிராக முலாயம் மட்டுமே அரணாக இருந்தார். 1989 ஆம் ஆண்டு அவர் முதல்வராக இருந்தபோதுதான் விஎச்பி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களின் அழைப்பின் பேரில் அயோத்தியில் திரண்டிருந்த கரசேவகர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. முலாயம் பின்னர் இந்த சம்பவம் குறித்து வருத்தமும் கவலையும் தெரிவித்தாலும், மத தலத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று நம்புவதை அவர் நிறுத்தவே இல்லை. அதனால் அவரை “மியா முலாயம்” என்று தாக்கி பேசுவதை பாஜக நிறுத்தவே இல்லை.

ஆனால் பா.ஜ.க.வுக்கு அந்த வெறுப்பு எல்லாம் கடந்த கால விஷயமாகவே குறைந்தபட்சம் அதன் முகத்தில் தெரிகிறது. உ.பி.,யில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அவரது மகன் அகிலேஷ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி, பா.ஜ.,வுக்கு ஒரே சவாலாக இருந்த நிலையில், முலாயம் மீது மரியாதையை தவிர, வேறு எதுவும் இல்லை என, பா.ஜ., கவனமாக முன்னிறுத்தி வருகிறது. யோகி ஆதித்யநாத் அரசு அவரது தகனத்திற்கு முழு அரசு மரியாதையை அறிவித்தது. மேலும் பாஜக சமீபத்தில் லக்னோவில் நடந்த அதன் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் அவரது பெயரையும் குறிப்பிட்டு இருந்தது.

என் சி டெபர்மா

முன்னாள் திரிபுரா வருவாய் அமைச்சரான என் சி டெபர்மா திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணியின் (ஐபிஎஃப்டி - IPFT ) நிறுவனர் தலைவராக இருந்தார். இது 2018ல் மாநிலத்தில் பாஜக தனது முதல் அரசாங்கத்தை அமைத்தபோது அதன் மதிப்புமிக்க கூட்டணி கட்சியாக இருந்தது.

ஐபிஎஃப்டி பாஜகவிடம் இருந்து நழுவிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. மற்றொரு பழங்குடியினக் கட்சியான திப்ரா மோதா (TIPRA Motha) திரிபுராவில் சமூகத்தின் வாக்குகளுக்கு வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

கடந்த ஐந்து தசாப்தங்களாக திரிபுராவின் பழங்குடி அரசியலில் டெபர்மா ஈடுபட்டிருந்தார். மேலும் ஐபிஎஃப்டி தவிர திரிபுரா உபஜாதி ஜூபா சமிதி, திரிபுரா ஹில் பீப்பிள்ஸ் கட்சி மற்றும் திரிபுரா பழங்குடியின தேசிய கவுன்சில் உட்பட மாநிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின அமைப்புகளுடனும் இனைந்து செயல்பட்டார்.

தூணோஜம் சாவோபா சிங்

முன்னாள் காங்கிரஸ் தலைவரான தூணோஜம் சாவோபா சிங் நம்போல் சட்டமன்ற தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றார் மற்றும் 1994 முதல் 1995 வரை மணிப்பூரின் துணை முதல்வராக இருந்தார். அடுத்த ஆண்டு, அவர் உள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் மாநிலத்தில காங்கிரஸ் தலைவராக சென்றார்.

1998 மற்றும் 1999 ஆம் ஆண்டு மக்களவைக்கு காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சிங் 2004 பொதுத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தார். அவர் வெற்றி பெற்ற பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் மத்திய, கலாச்சாரம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் மணிப்பூர் பாஜக தலைவராகவும் ஆனார் மற்றும் 2006 வரை பதவியில் இருந்தார்.

மணிப்பூர் மக்கள் கட்சி (எம்பிபி) என்ற தனது சொந்தக் கட்சியைத் தொடங்கிய பின்னர், பாஜகவுக்குத் திரும்பிய அவர், 2012ல் மீண்டும் மாநிலக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2016 வரை மணிப்பூர் பாஜக தலைவராக இருந்த அவர், 2017 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் கட்சி வெற்றி பெற்றபோது முதல்வராக இருப்பவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இருப்பினும், அவர் என் பிரேன் சிங்கிடம் தோல்வியுற்றார்.

Bjp India Padma Shri Awards Republic Day 2 Padma Bhushan Award
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment