கேரள மழை வெள்ளத்தில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் கேரளா : மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்படைந்த கேரள மாநிலம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. வெள்ள நிவாரண முகாம்களில் இருந்து வெளியேறும் மக்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்பினை அனைவரும் சேர்ந்து சீர்படுத்தி வருகிறார்கள்.
சிதிலமடைந்த வீதிகள், தெருக்கள், சாலைகள், மற்றும் மின் இணைப்புகள் ஆகியவற்றை மிக விரைவாக சரி செய்யும் முனைப்பில் இயங்கி வருகிறது கேரள அரசு.
இடுக்கி மாவட்டத்தின் தற்போதைய நிலை
இன்னும் இடுக்கி மாவட்டத்தில் இன்னும் மழை பெய்து வருகிறது. ஆனால் முன்பு பெய்தது போல கனமழையாக இல்லாமல் சிறு தூரல் மட்டுமே போட்டு வருகிறது. வெள்ளத்திற்கு இறந்து போன 242 பேர்களில் 52 நபர்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான். மற்ற மாவட்டங்களை விடவும் இப்பகுதியில் தான் அதிக அளவு நிலச்சரிவும் ஏற்பட்டது.
இடுக்கியில் மின்சார இணைப்பு பலத்த சேதாரம் அடைந்திருக்கிறது. 16,158 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 25.6 லட்சம் மின் இணைப்புகள் முற்றிலுமாக புதுப்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
நிவாரண முகாம்களில் இருந்து வெளிவந்த மக்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் மிகவும் தவித்து வருகின்றனர். அனைவரும் மெழுகுவர்த்தி மற்றும் மண்ணெண்ணய் விளக்குகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
கேரள மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர உதவும் அரசு ஊழியர்கள்
அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள தொலைக்காட்சியினையோ, இணையத்தினையோ நாட வேண்டி இருக்கின்ற நிலையில் மின்சாரம் இல்லாமல் இருப்பது அவர்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருக்கிறது. இணையம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்புகளை தரும் இணைப்புகள் அனைத்தும் முற்றிலுமாக சேதாரமாகிவிட்டது.
குலமவு, அடிமலி, மற்றும் செருதொணி ஆகிய பகுதிகளில் இருந்த ட்ரான்ஸ்பார்ம்கள் அனைத்தும் முற்றிலுமாக சகதிக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. பொதுப்பணித்துறைகளில் இருக்கும் ஊழியர்கள் தங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை துரிதமாக சாலைகளை சரி செய்து வருகிறார்கள்.
உள்கட்டுமானத்துறையில் 350 கோடி ரூபாய் அளவிற்கு சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. அதே போல் வருவாய்த்துறையும் 470 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டினை சந்தித்திருக்கிறது.
உதவிக்கரம் நீட்டும் அண்டை மாநிலத்தினர்
முதலில் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்பினை சந்திக்காத எட்டு மாவட்டங்களில் பணிகளை விரைவாக முடித்துவிட்டு மற்ற பகுதிகளில் வேலைகளை தொடங்கும் முனைப்பில் உள்ளனர் கேரள மின் வாரியம். வேலைகளை எளிதில் முடிப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து 120 துறைசார் வல்லுநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
கேரள ஊழியர்களுடன் தமிழ்நாடு ஊழியர்களும் இணைந்து பல்வேறு இடங்களில் மீட்புப்பணிகளை செய்து வருகிறார்கள். பல்வேறு பக்கங்களில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ள நிலையில் வேலைகளில் தொய்வு ஏற்படும் அபாயமும் நிலவிவருகிறது.
கேரளாவில் இருந்து வெளியேறும் வட இந்திய வேலையாட்கள் பற்றி படிக்க
11,000 கிலோ மீட்டர் அளவிற்கு சாலைகள் சேதாரமடைந்துள்ளது. அதே போல் 237 மேம்பாலங்கள் பழுதடைந்துள்ளன. இதற்கான இழப்பீடு மட்டுமே 3000 கோடியினைத் தொட்டது.
அடிமலி அருகில் இருக்கும் கத்திபாறா பகுதி முழுவதும் நீர் பகுதி சூழ்ந்து தனித்துவிடப்பட்ட தீவாக காட்சி அளித்தது. எர்த் மூவிங் வாகனம் கொண்டு அப்பகுதியை சூழ்ந்திருந்த மண்ணை நீக்கியுள்ளனர்.
இடுக்கி தொகுதியின் அமைச்சர் ஜாய்ஸ் ஜார்ஜ் இதைப்பற்றி பேசும் போது, தற்போது அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது சாலைகளுக்குத் தான். அனைத்து சாலைகளும் இணைக்கப்படும் வகையில் சீர்படுத்தினால் தான் போக்குவரத்து சீராகும்.
இடுக்கி மற்றும் மூணார் - மரயூர் சாலையில் இருக்கும் இரண்டு பாலங்கள் முற்றிலும் சேதாரமாகிவிட்டது. தற்போது இருக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு நிச்சயமாக இதனை கட்ட முடியாது என்று இடுக்கியின் ஆட்சியர் கே. ஜீவன் பாபு தெரிவித்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.