தலித் என்ற வார்த்தைக்குத் தடை : தலித் என்ற வார்த்தையை ஊடகத்துறை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம். தலித் என்ற வார்த்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லாததால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பதங்களை பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சகம் கூறும் போது “தலித் என்ற வார்த்தை அடையாளக் குறியீடாகவும், அரசியல் சார்ந்த பதமாகவும் இருக்கிறது” என்று கூறியுள்ளது.
தலித் என்பதற்கு பதிலாக Scheduled Caste என்பதை பயன்படுத்தவும்
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ஒவ்வொரு முறையும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தலித்தென்று அடையாளப்படுத்த வேண்டாமென்றும், ஆங்கிலத்தில் நடைமுறையில் இருக்கும் Scheduled Caste என்பதற்கு நிகரான பிராந்திய மொழி வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்ளவும்” என்று ஊடகத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தலித் வார்த்தை பிரயோகம் - மும்பை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
மார்ச் மாதத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் “மாநில அரசுகள் அனைத்தும் தலித்திற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பதத்தினை பயன்படுத்தக் கூறி அறிவுறுத்தியது.
தலித்தென்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று ஊடகங்களுக்கு அறிவுறுத்துவது குறித்து ஆறு வாரத்திற்குள் பரிசீலிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த அறிவுரைப் பற்றிய கருத்துகள்
மத்திய அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினைப் பற்றி சமூக நீதி அமைச்சகத்தின் துணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறிய போது “தலித்தென்ற வார்த்தை பெருமை சேர்ப்பதாகவே அமைகிறது” என்று கூறினார்.
மேலும் இந்த பெட்டிசன் புத்த மதம் தழுவிய ஒருவரால் வைக்கப்பட்டது. அரசு தன்னுடைய ஆவணங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்றே வைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஊடகத்துறை பயன்படுத்துவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தான் நினைக்கிறேன்.
To read this article in English
நிறைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களை தலித்தென அடையாளப்படுத்திக் கொள்வதில் எந்த வருத்தமும் அடைவதில்லை. அம்பேத்காரினை பின்பற்றும் மக்கள் இந்த வார்த்தையை பெருமையாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்த சுகாதே தோரட் இது பற்றி கூறுகையில் “இந்த வார்த்தை பிரயோகத்தில் எந்த தவறும் இல்லை என்று தான் கூறுவேன்” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.