Refusal to wear bangles, sindoor signals woman’s unwillingness to accept marriage : தன்னுடைய மனைவி இந்து முறைப்படி கூறப்பட்டிருக்கும் சடங்குகளை பின்பற்ற மறுக்கிறார். இது என்னை பெரிதும் துன்புறுத்தும் வகையில் உள்ளது.
எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கௌஹாத்தியை சேர்ந்த ஒருவர் குடும்பவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனை தொடர்ந்து அவர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
மேலும் படிக்க : ‘அப்போ அன்வர்?’ – டிக்டாக் தடைக்கு வார்னரை கலாய்த்த அஷ்வின்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு அவருடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற உரிமை உள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண் நெற்றியில் குங்குமம் வைப்பதையும், கைகளில் வளையல்கள் அணிவதையும் பின்பற்றுவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.
அதை அவர்கள் செய்ய தவறிவிட்டால் அவர்கள் தாங்களை திருமணமாகதவர்கள் என்று அடையாளப்படுத்துவதையே விரும்புவதாக அர்த்தம். இது கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவம் கொடுமை செய்வதற்கும் ஒப்பாகும் என்று கௌஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் லம்பா மற்றும் நீதிபதி சௌமித்ரா சைய்கியா ஆகியோர் 19ம் தேதி அன்று வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Refusal to wear bangles sindoor signals womans unwillingness to accept marriage says gauhati hc