ஆன்லைன் க்யூரேட்டட் உள்ளடக்கத்திற்கான சுய-ஒழுங்குமுறை அமைப்பு (ஓ.டி.டி - OTT) தகவல் தொழில்நுட்ப விதிகளை (2021) செயல்படுத்தும் மேடையில் தண்டனைக்குரிய நடவடிக்கையை பரிந்துரைத்துள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட உத்தரவில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு ஓ.டி.டி தளங்களுக்கான பதிவுசெய்யப்பட்ட சுய-ஒழுங்குமுறை அமைப்பான டிஜிட்டல் வெளியீட்டாளர் உள்ளடக்க குறைகள் கவுன்சில் (டி.பி.சி.ஜி.சி - DPCGC) ஓ.டி.டி-யில் ஸ்ட்ரீம் செய்யப்படும் உள்ளடக்கத்திற்கு "கடுமையாக ஆட்சேபனை" தெரிவித்துள்ளது. உள்ளு (ULLU) எனப்படும் இயங்குதளம், அத்தகைய உள்ளடக்கத்தை 15 நாட்களில் அகற்ற உத்தரவிட்டுள்ளது.
உள்ளுவில் (ULLU) ஸ்ட்ரீம் செய்யப்பட்ட உள்ளடக்கத்தின் ஆபாசமான தன்மை குறித்த புகாரின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புகார்தாரர், சதீஷ் வகேலா, சில வெப் தொடர்களில் ஆபாசமும் நிர்வாணமும் மட்டுமே இருந்தன என்றும், இது நாட்டின் சட்டம் மற்றும் ஐடி (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்) விதிகள், 2021 க்கு எதிரானது என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
புகார்தாரர் ஆரம்பத்தில் இந்த விஷயத்தை உள்ளு தளத்திடம் எழுப்பினார். ஆனால் டி.பி.சி.ஜி.சி உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில் அதிருப்தி அடைந்தார். அதன் பதிலில், உள்ளு அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது மற்றும் பார்வையாளர்களின் விருப்புரிமையை அடிப்படையாகக் கொண்டது என்று வலியுறுத்தியது. மேலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள "பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்" ஆகியவற்றையும் மேற்கோள் காட்டியது.
இந்நிலையில், டி.பி.சி.ஜி.சி உள்ளு தளத்தை கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், இந்த வெப் சீரிஸ்களை முழுவதுமாக அகற்றவும் அல்லது ஐடி விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய, புண்படுத்தும் காட்சிகளில் பொருத்தமான திருத்தங்களைச் செய்யவும், ஒரு வலுவான ஆலோசனையை வழங்கியது. உள்ளு தளத்தின் அதிகாரிகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸைத் தொடர்பு கொண்டபோது, இந்த உத்தரவை உள்நாட்டில் மதிப்பாய்வு செய்வதாகக் கூறினர். ஆனால் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினர்.
ஓ.டி.டி இயங்குதளங்கள் "ஆக்கப்பூர்வமான வெளிப்பாடாக மறைக்கப்பட்ட மோசமான மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்யக்கூடாது" என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்று அரசாங்கம் சமீபத்தில் குறிப்பிட்டது. ஓ.டி.டி பிளாட்ஃபார்ம்களில் முறைகேடு மற்றும் ஆபாசமான உள்ளடக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் வருவதை தீவிரமாகக் கவனித்து வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
‘கல்லூரி ரொமான்ஸ்’ ‘College Romance’ என்ற வெப் சீரிஸ் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்த நிலையில், அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்துளளார். உள்ளடக்கத்தின் வெளிப்படையான பாலியல் மொழி, அது பரவலாகக் கிடைப்பதால், ஈர்க்கக்கூடிய மனதை பாதிக்கும் என்று நீதிமன்றம் கூறியது. இதுபோன்ற தளங்களில் மொழியை சரிபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil