Advertisment

உங்கள் உறவு எங்களுக்கு மிக முக்கியம் - இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் மிலிந்த மொராகோடாவுடன் நேர்காணல்

கடந்த சில வருடங்களாக இந்தியா-இலங்கை உறவுகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தன. இலங்கை தனது பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசிய பதில்

author-image
WebDesk
New Update
Milinda Moragoda Sri Lanka's High Commissioner to India

Nirupama Subramanian 

Advertisment

Milinda Moragoda: இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் நிருபமா சுப்ரமணியனிடம் அந்நாட்டின் பொருளாதார பிரச்சனை, இந்தியாவுடனான உறவு, மற்றும் இந்திய பெருங்கடலில் நிலவும் அதிகாரத்திற்கான போட்டிகள் குறித்து பேசினார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி எவ்வளவு மோசமாக உள்ளது?

தற்போது எங்கள் முன்னால் இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று அந்நிய செலாவணி மற்றொன்று நிதி தொடர்பான சவால். சுதந்திரம் பெற்றதில் இருந்து பல ஆண்டுகளாக எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தோம். தொற்றுநோய் தற்போது அதனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. வாரன் பஃபெட் ஒன்று கூறுவது உண்டு, ”அலை குறையும் போது நிர்வாணமாய் குளிப்பவர்களை பார்க்க முடியும்” அப்படி தான் கொரோனா தொற்று இந்த அலையை கீழ் நோக்கி செல்ல வைத்தது. இது உண்மையான சவால் தான். இந்தியா நிலைமையை சீர்படுத்த கொஞ்சம் கொஞ்சமாக முன்வந்துள்ளது. ஆனால் சவால்களின் மூல காரணங்களை நாம் சமாளிக்க வேண்டும்.

இந்தியா எவ்வாறு உதவியது?

இலங்கை நிதி அமைச்சர் பாசில் ராஜபக்ச இந்தியாவை வருகை தந்த போது ஒத்துழைப்பின் நான்கு தூண்களுக்கு (“four pillars of co-operation” ) ஒப்புக் கொண்டோம். முதலாவது உணவு மற்றும் மருந்துக்கான அவசர உதவி. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கான ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிரெடிட் லைனை, ராஜபக்சவுடனான தனது சமீபத்திய ஆன்லைன் கலந்துரையாடலுக்கு பிறகு அறிவித்தார்.

இரண்டாவது பெட்ரோலியம் விநியோகம். புதன் கிழமை இதற்கான 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிரெடிட் லைனை புதன்கிழமை இந்தியா அறிவித்தது. மேலும் இந்தியா இலங்கை இடையேயான திரிகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்தில் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பாக இருநாடுகள் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றும் என்பதை ஆய்வு செய்தோம்.

மூன்றாவதாக எங்களின் அந்நிய செலாவணி கையிருப்புகளை இந்தியா எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பது தொடர்பானது. அதில் இரண்டு கட்டங்கள் இருந்தன. முதலாவது ஆசியன் க்ளியரிங்க் யூனியனில் எங்களின் நிலுவைத்தொகையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க இந்தியா தன்னுடைய ஆதரவை அளித்தது. அதன் மதிப்பானது 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அடுத்தது 400 மில்லியன் டாலர்கள் ஸ்வாம்.

நான்காவது தூணாக இருந்தது முதலீடு. ஏனெனில் இந்தியா மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக உள்ளது, எங்கள் சுற்றுலாப் பயணிகளில் 20-25 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

கடந்த சில வருடங்களாக இந்தியா-இலங்கை உறவுகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தன. இலங்கை தனது பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

மறுபரிசீலனை என்று நான் கூற மாட்டேன். அதிபராக கோத்தபய பொறூப்பேற்றுக் கொண்ட நாளில் இருந்தே இந்தியாவுடனான உறவு குறித்து அவர் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். ராஜபக்ச இந்த இரண்டு நாடுகளும் ஒன்றிணைவதை விரும்புகிறார். இரு பொருளாதாரங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புவதாக நான் நினைக்கின்றேன். தொற்றுநோய் அவருக்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியது. அவர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் தொற்று சூழல் அவரை தாக்கியது. உங்களுக்கு ஏற்றுமதி செய்ய இயலாத சூழல் வரும் வரை நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தீர்கள்

சீனாவுடன் பிணக்கு; இந்தியாவுடன் இணைந்து எண்ணெய் கிணறு வயல்களை மேம்படுத்த இலங்கை முடிவு

கடந்த நான்கு வாரங்களில் திரிகோணமலை திட்டத்தை நீங்கள் இறுதி செய்கிறீர்கள். இந்தியா உங்களுக்கு நிதி உதவி செய்கிறது. தற்போது இலங்கை இந்தியாவின் முதலீட்டை செயல்படுத்துகிறது. கொழும்பில் உள்ள பலர் உட்பட இதனை ஒரு பரிவர்த்தனையாக கருதுகின்றனர்.

இதனை நீங்கள் பெரிது படுத்தி பார்க்க வேண்டும். நீங்கள் கூறிய முதலீட்டில் ஒரு பகுதி எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவுக்கு செல்கிறது. பெட்ரோலிய சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு என்று வரும் போது திரிகோணமலை இந்தியாவுக்கு ஒரு சிறந்த பகுதியாக இருக்கிறது. மேலும் அப்பகுதியை அந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த இயலும். ஏன் என்றால் இது ஏனென்றால் அது கடல் பாதைகளில் இருந்து மற்ற தேர்வுகளை முடிவு செய்யவும் கூட அதிக தொலைவில் அமைந்துள்ளது. இயற்கையாகவே இது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. திட்டமிடுதலில் இந்தியா எங்களை சேர்க்கும் நிலையில் இருந்தால் இது இருதரப்பிற்குமான வெற்றி. இந்தியாவுக்கு எண்ணெய் கிடைக்கும். எங்களுக்கு முதலீடு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு.

அடுத்ததாக மின்சாரம். இது மிகவும் முக்கியமானது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாம்பூரில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறைவேற்ற இந்திய அரசுக்கு சொந்தமான NTPC நிறுவனம் சிலோன் மின்சார வாரியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது. எங்களின் மொத்த மின் உற்பத்தி திறன் 4,300 மெகாவாட்டிற்கு கீழ் உள்ளது. NTPC மட்டும் இந்தியாவில் 60,000 MW உற்பத்தி செய்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் மன்னாரில் மட்டும் காற்றாலை ஆற்றலுக்கான சாத்தியம் 5,000 மெகாவாட்டாக உள்ளது, கேபிள் போடுவது பெரிய விஷயமல்ல என்பதால் இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்வது குறித்தும் நாங்கள் யோசனை செய்து வருகிறோம்.

மூன்றாவது துறைமுகம். ஏற்கனவே கிழக்கு கொள்கலன் முனையம் (East Container Terminal) திட்டத்தில் பிரச்சனை இருந்தது. ஆனால் தற்போது மேற்கு கொள்கலன் முனையத்தை அதானி நிறுவனம் மேம்படுத்த உள்ளது. கொழும்பு துறைமுகத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், 80% வியாபாரம் ட்ரான்ஷிப்மெண்ட் மூலம் கிடைப்பது தான். இதில், 70 சதவீதம் இந்தியாவுக்கும், 70 சதவீதத்தில், 35 சதவீதம் அதானி வசம் உள்ள துறைமுகங்களுக்கும் செல்கிறது. அதானியிடம் இருக்கும் 3 மில்லியன் டியூஸ்களை (teus - 20 அடி கண்டெய்னர்கள்) சேர்த்து மொத்தமாக எங்களிடம் இருக்கும் டியூஸ்களின் எண்ணிக்கை 7.5 மில்லியனாக உள்ளது.

பரிவர்த்தனை பகுதி முக்கியமானது, ஏனெனில் நம்பிக்கை என்பது பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. வேறு வழியில்லை

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சீனாவின் அதிபர் ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதி, இலங்கையை கடனுக்குள் சிக்க வைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், கெட்டுப்போன ஆர்கானிக் உரங்களை சீனா அனுப்பியது தொடர்பாக இரு தரப்பிலும் விவாதங்கள் வைக்கப்பட்டன. இலங்கையில் தற்போது சீனாவுக்கு எதிரான போக்கு அதிகமாக உள்ளதா?

நான் அதனை அப்படி பார்க்கவில்லை. எங்களின் மொத்த கடன்களில் சீனாவில் இருந்து பெற்றது வெறும் 10% மட்டுமே. இது முக்கியமானது தான். ஆனால் அதி முக்கியமானதாக இல்லை. எங்களின் முக்கிய கடன்கள் அனைத்தும் சர்வதேச பத்திரங்கள் மூலம் வருகின்றன. இவர்கள் தான் காரணம் அவர்கள் தான் காரணம் என்று மற்றவர்களை குறை கூறுவதில் ஒரு பயனும் இல்லை. நான் கூறியதைப் போன்றே, சுதந்திரத்திற்கு பின்னால் இருந்து நாங்கள் இப்படி தான் இயங்கி வந்தோம். மற்ற நாட்டினரையோ அல்லது பிறரையோ குறை கூறுவதை விடுத்து நாம் சுதந்திரத்திற்கு பிறகு என்ன செய்தோம் என்பதை கண்ணாடி முன்பு நின்று பார்த்து கண்டு கொள்ள வேண்டும்.

இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான தீவிர போட்டியில் ஒரு பக்கம் சீனா மற்றொரு பக்கம் குவாட் நாடுகளுடன் இந்தியா. இந்த போட்டியை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

நமது வரலாறு முழுவதும், நமது மிகப்பெரிய சவால்கள் மற்றும் நமது மிகப்பெரிய வாய்ப்புகள் கடலில் இருந்து வந்தவை. நாம் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டோம். அனைத்திற்கும் ஒரே காரணம் நம்முடைய அமைவிடம். 1980களில் இலங்கை மெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்பட்டபோது, இந்தியாவுடன் பதட்டங்கள் இருந்தன, அதன் விளைவுகளும் இருந்தன. இந்தியா தற்போது புதிதாக தலையெடுக்கும் ஒரு நாடு. எங்களின் கடந்த காலங்களில் இருந்து, இதனை எப்படி கையாள வேண்டும் என்று நாங்கள் கற்றுக் கொண்டோம். சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம், சில சமயங்களில் நம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறோம். சில சமயங்களில் நாம் கற்றுக் கொள்வதில்லை. அதே வழியில் இது நம்முடைய விதியும் கூட. ஒரு சிறிய நாட்டிற்கான உண்மைகள் இவை. நாம் இதனை நிர்வகிக்க வேண்டும்.

இலங்கையின் உலகளாவிய பார்வையில் சார்க் எங்கே உள்ளது?

சார்க்கில் (South Asian Association for Regional Cooperation) இலங்கையின் எதிர்காலம் நன்றாக இருக்கும். , மேலும் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஆனால் அங்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு எல்லை உண்டு. இந்தியாவுடனான உறவை பிராந்தியத்தில் மிக முக்கியமான உறவாக நாங்கள் பார்க்கிறோம்,

நம்பிக்கையுடன் செயல்படக்கூடிய வகையில் பரிவர்த்தனை, ஸ்ட்ரேடஜிக் முதல் சிறப்பு உறவு ஆகியவற்றை நாங்கள் நிர்வகிப்பதோடு நம்பிக்கையையும் உருவாக்குவோம். இரண்டு நாடுகளும் ஜனநாயக நாடுகள், இரண்டு நாடுகளும் பல்வேறு குரல்களை அமைப்பில் கொண்டுள்ளோம். இரண்டு படிகள் முன்னோக்கி நகருவோம். ஒரு படி பின்னோக்கி செல்வோம். இப்படி தாம் முன்னேற வேண்டும். பலதரப்பு உறவுகள் பற்றி கூறும் போது, சார்க் மட்டுமின்றி பிம்ஸ்டெக் ((Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்பிற்கும் வெளியுறவுத்துறை ஆதரவு அளிக்க முயலுகிறது. எங்களுக்கு இருதரப்பு உறவின் மூலம் அன்றாட வேலைகள் முன்னேற வேண்டும்.

இந்த திட்டம் இந்திய- இலங்கை உறவை மேம்படுத்தும்: மத்திய அரசு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரியப் பிரச்சினைகளில் ஒன்று தமிழர் பிரச்சினையாகும், மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இது இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையாக மாறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அதிபர் ராஜபக்ச தன்னுடைய அதிபர் உரையின் போது செவ்வாய்கிழமை அன்று, புதிய அரசியலமைப்பின் கட்டமைப்பை உருவாக்க தாம் அமைத்த நிபுணர்கள் குழுவைப் பற்றி குறிப்பிட்டார். அதனை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற விவாதத்திற்காக வைப்பதாகவும் கூறியுள்ளார். அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

தன்னுடைய வேலை தொடர்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பயணம் சென்றவன் என்ற அடிப்படையில் கூறுகின்றேன். மக்களுக்கு அரசியலமைப்பு பற்றிய கவலை இல்லை. அவர்களுக்கு வாழ்வாதாரமும் வளர்ச்சியும் தான் தேவை. அனைத்து அரசியல் கட்சிகளும் அதை நோக்கி தான் செயல்பட வேண்டும். இந்த ஒத்துழைப்பு இரண்டு நிலைகளில் நடைபெற வேண்டும் என்று நான் பார்க்கிறேன். ஒன்று, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற யோசனை, மற்றையது வடக்கு, கிழக்கை எப்படி மேம்படுத்தப் போகின்றோம் என்பது தொடர்பான புரிதல். ஏனென்றால் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் எதிர்காலம் என்று வரும்போது அரசியல் சாசனம் குறித்து நாங்கள் முடிவு செய்யும் வரை காத்திருக்க மக்கள் காத்திருக்கமாட்டார்கள்.

அதிபராக பதவியேற்ற பிறகு ஒருமுறை கூட தமிழ் எம்.பி.க்களை சந்திக்கவில்லை என்பது அதிபர் ராஜபக்ச மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. வெறுப்பு மிக்க பேச்சுகளை வெளியிட்டு, இலங்கையின் சட்ட அமலாக்க அதிகாரிகளின் பார்வையில் இருக்கும் புத்த பிக்கு ஒருவரை நியமித்திருப்பது குறித்தும் சில விமர்சனங்கள் வைக்கப்படுகிறது

நாங்கள் ஜனநாயக நாடு. அங்கே நிறைய குரல்கள் உள்ளன. இன்று, உலகம் முழுவதும் பிரிவு, சார்பு நிலை, அச்சுறுத்தல் ஆகியவை இருக்கின்றன. இதில் இலங்கை ஒன்றும் வித்தியாசப்படவில்லை. இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் மற்றும் மக்கள் தங்கள் அடையாளங்களில் கவனம் செலுத்துவதால், பிரிவினையானது பலகையில் உள்ளது. இந்த சூழலில் இந்நடவடிக்கைகளை பொருத்திப் பார்க்க வேண்டும்.

ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியைப் பொறுத்த வரையில் அதிபரின் கவனம் நாடாளுமன்றத்தில் அதிகம் இருந்தது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏதாவது ஒரு தெரிவுக்குழு முயற்சித்து வருகின்றது. அவர் இந்த முடிவை நாடாளுமன்றத்தின் கையில் ஒப்படைத்துவிட்டார். ஆனால் இப்போது நிபுணர் குழு அதன் முன்மொழிவுகளை வெளியிடும், அந்த கட்டத்தில் அவர் மேற்கொண்டு செயல்படுவார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment