கருப்பு பண ஒழிப்பு: ரிலையன்ஸ் குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

Relaince: வருமான வரி மும்பை பிரிவுக்கும், மத்திய வருமான வரி வாரியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னரே,நோட்டிஸ் வழங்கப்பட்டதாக .....

வருமான வரித் துறையின் மும்பை பிரிவு, பல நாடுகளில் இருக்கும் அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2015 கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டு, மார்ச் 28-ம் தேதியன்று வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் வைத்திருப்பதாக முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளின் பெயர்களில் இந்த நோட்டிஸ் யாருக்கும் தெரியாவண்ணமாக வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டில் எச்எஸ்பிசி ஜெனீவாவில் 700 இந்திய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கணக்குகளை வைத்திருக்கும் பற்றிய விவரங்களை அரசாங்கம் பெற்ற பின்னர் ஐடி விசாரணை தொடங்கியது. இதைத் தொடர்ந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (பிப்ரவரி 2015) சுவிஸ் லீக்ஸ்  வெளியிட்டது. இது எச்எஸ்பிசி ஜெனீவா கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை 1,195 ஆக விரிவாக்கம் செய்தது.

இந்த ஜெனீவா எச்எஸ்பிசி யில்  வரிவிலக்கு நாடுகளில் இயங்கும்,14 ஆப்ஷோர் கம்பெனிகளின் ( offshore companies) கணக்கான 601 மில்லியன் டாலர் எப்படி ரிலையன்ஸ் குழுமத்திற்கு எப்படி சம்மந்தம் உள்ளது என்பது ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ விசாரணையே அம்பலப்படுத்தியது.

பிப்ரவரி 4, 2019 தேதியிட்ட வருமான வரி விசாரணை அறிக்கையின் மூலமாகவும், மார்ச் 28, 2019 அன்று அனுப்பப்பட்ட  நோட்டிஸின் மூலமகாவும்  என்ன தெரியவருகிறது என்றால் “அம்பானி குடும்ப உறுப்பினர்கள் இந்த 14 நிறுவனங்களில் ஒன்றான கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மூலம்   பயனடைந்து உள்ளார்கள்  என்பதே.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வருமான வரித் துறை அனுப்பிய நோட்டிசையும், குற்றச்சாட்டுகளையும்  குறித்து  ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவருக்கு சில கேள்விகளை மெயிலில் கேட்டிருந்தது. அதற்கு அவர்    “இதுபோன்ற வருமானத் துறை நோட்டீஸ்  மற்றும்  நீங்கள் மெயிலில் அனைத்து கேள்விகளையும் நாங்கள் மறுக்கிறோம்.” என்று பதிலளித்தார்.

வருமான வரி மும்பை பிரிவுக்கும், மத்திய வருமான வரி வாரியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னரே,  இந்த நோட்டிஸ் வழங்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது. நோட்டிஸ் அனுப்புவதற்கு  சில நாட்களுக்கு முன்னர் இறுதி அனுமதி வழங்கப்பட்டது.

கறுப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரிச் சட்டம், 2015 இன் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (I) கீன் இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ‘கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்’ மற்றும் அதன் அடிப்படை நிறுவனமான ‘கேமன் தீவுகளை தளமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனம் லிமிடெட் ‘ ஆகியவற்றில் உள்ள தொடர்புகளையும் , இருப்புக்களையும்  வெளியிட அம்பானி குழுமம் தவறிவிட்டதாகவும் ஐடி துறை நோட்டிஸ் குற்றம் சாட்டியுள்ளது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close