இஸ்ரேலில் பணிபுரியும் இந்தியர்கள், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள இந்தியக் குடிமக்கள் நாட்டிற்குள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Relocate to safe areas’: India issues advisory to its nationals in Israel
இந்திய தூதரகம் உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் பகிர்ந்து கொண்டது.
லெபனானில் இருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் டேங்கர் எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லைச் சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தில் தாக்கியதில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட 3 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“