தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு கடுமையாக பதிலளித்த காங்கிரஸ், மின்னணு இயந்திரங்களை (EVM) தவறாகப் பயன்படுத்துமோ என்ற அச்சத்தை முறைப்படி நிவர்த்தி செய்யாமல் அதை வெளியிடுவது, அமைப்பின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என்று கூறியது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பிக்கையானது, தேர்தல் ஆணையத்தின் மீது மத்திய அரசால் கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக மீண்டும் மீண்டும் மீறப்பட்டுள்ளது.
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன, துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் தவறான பயன்பாடு குறித்த அச்சங்கள் முறையாக கவனிக்கப்படவில்லை. வாக்காளர்களும் கட்சிகளும் தேர்தல் முறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.
இந்த சந்தேகத்திற்கிடமான முறையை, பல தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மற்ற இடங்களுக்கு நீட்டிக்க முடியுமா என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள். இது அமைப்பின் மீதான நம்பிக்கையை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல தொகுதிகளின் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை நிரூபிக்க, ஜனவரி 16 அன்று, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அவர்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்களைக் கேட்டுள்ளதாகவும் வியாழனன்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முன்மொழியப்பட்ட திட்டம் உள்நாட்டில் இடம்பெயர்வு காரணமாக வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதைத் தவறவிடாமல் தடுக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் யுகத்தில் இடம்பெயர்வு காரணமாக உரிமையை மறுப்பது ஒரு விருப்பமல்ல என்று அது கூறியது.
இதனிடையே தேர்தல் ஆணையத்தை விமர்சித்த காங்கிரஸ், சமீபத்திய குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை மேற்கோள் காட்டியது. மேலும் பிரதமர் மோடிக்கு தனது சொந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவதற்காக தேர்தல் அட்டவணையை அறிவிப்பதில் தாமதம் செய்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பை குற்றம் சாட்டியது.
பிரச்சினைக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குஜராத்தில், இந்த முறை, சந்தேகத்திற்கிடமான வாக்கு எண்ணிக்கையை நாங்கள் பார்த்தோம், இது கடைசி நேரத்தில் 10-12% வாக்காளர்கள் வாக்களித்ததைக் காட்டுகிறது என்று அக்கட்சி கூறியது.
இது ஒவ்வொரு வாக்கையும் அளிக்க 25-30 வினாடிகள் எடுத்துக் கொள்ளப்பட்டதை காட்டுகிறது, ஆனால் உண்மையில் இப்படி நடப்பது சாத்தியமற்றது.
இந்த சந்தேகத்திற்கிடமான வடிவங்களை பல தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மற்ற இடங்களுக்கு நீட்டிக்க முடியுமா என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள். இது அமைப்பின் மீதான நம்பிக்கையை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று ரமேஷ் கூறினார்.
தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளின் கவலைகளை நேர்மையாக பரிசீலிப்பது, தேர்தல் முறையில் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் என்று காங்கிரஸ் மேலும் கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.