Advertisment

ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்து என்ன?

டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகத்தில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்து என்ன?

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயந்திர செயல்பாடுகள் மற்றும் அது தொடர்பாக கருத்துகளை கேட்க தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.

Advertisment

முன்னதாக, நேந்று இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) கட்சிகள் பங்கேற்கவில்லை, ஆனால் சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து விட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது.

ஜனதா தளம், சிவசேனா, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி, பாரத் ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மக்கள் ஜனநாயகக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டன. முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவையின் சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவில் தெளிவு இல்லை என்று தெரிவித்தனர். அதுதவிர புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வரையறை தெளிவாக இல்லை என்றும் அவர்கள் கூறினர். டிசம்பர் 29 அன்று தேர்தல் ஆணையம், உள்நாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த தொகுதிகளுக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்படும் எனத் அறிவித்தது.

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் ஒரே வாக்குச் சாவடியில் இருந்து வெவ்வேறு ஊர்களில் உள்ள தொகுதிகளுக்கு வாக்களிக்கும் படி இது உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக இன்று (ஜனவரி 16) அரசியல் கட்சிகளுடன் கருத்துக் கேட்பு நடத்த உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கூறுகையில், "கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த பார்வை தொலை வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன்மொழிவை ஒருமனதாக எதிர்க்க வேண்டும் என்பதாகும். இது பாரிய அரசியலுக்கு முரண்பாடாகவும், சிக்கலாகவும் உள்ளன. உதாரணமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வரையறை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை போன்றவை தெளிவாக இல்லை" என்று கூறினார்.

"எனவே நாங்கள் அனைவரும் ஒருமனதாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் திட்டத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளோம்" என்று சிங் கூறினார்.

ஜனவரி 31-ம் தேதிக்குள் கட்சிகள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் பதில்கள் குறித்து விவாதிக்க ஜனவரி 25-ம் தேதி மீண்டும் எதிர்க்கட்சிகள் கூட்டம் கூட்டப்படும். கட்சிகள் கூட்டாக பதில் அனுப்பும் அல்லது தனித்தனியாக தங்களின் பதில்களை அளிக்கும் என்று சிங் கூறினார்.

என்சிபி மற்றும் எஸ்பி கட்சியின் தலைவர்கள் என்னிடம் பேசினர். அப்போது, அவர்கள் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அவர்களுடைய கருத்துகளை என்னிடம் தெரிவித்தனர் என்றார். கூட்டத்தில் டிஎம்சி இல்லாதது குறித்து கேட்டபோது " டிஎம்சி கட்சியின் நிலைப்பாடு குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் அவர்களின் கருத்தைப் பற்றி விவாதித்து அது குறித்து பின்னர் தெரிவிப்போம் " என்று சிங் கூறினார்.

தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கட்சிகள் கலந்துகொள்ளும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தெரிவித்தார். "இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் அனைத்தும் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். நாங்கள் EVM,RVM மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி முக்கியமான கேள்விகளை எழுப்புவோம். அரசியல் கட்சிகளின் நிலைபாடு அறியாமல் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

ஆர்ஜேடியின் ராஜ்யசபா எம்பி மனோஜ் குமார் ஜா, இசி முன்மொழிவு வெளிப்படையானது அல்ல என்றும் உறுதியான பகுப்பாய்வு எதுவும் இல்லை என்றும் கூறினார். "எதிர்க்கட்சிகள் ஆணையத்தின் முன்மொழிவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும். 3 கேள்விகளை எழுப்பும். இந்த திட்டத்தில் ஆணையத்தின் நம்பகத்தன்மை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வரையறையின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எதிர்பார்க்கும் பிரிவு 324 இன் யோசனையின் நம்பகத்தன்மை ஆகியவை குறித்து கேள்வி எழுப்புவோம்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment