pradhan-mantri-awas-yojana: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.
இந்தத் திட்டம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் PMAY Urban மற்றும் PMAY Gramin (PMAY-G) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 60% விழுக்காடு மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம் கிராமப்புற பயனாளிகளுக்கு முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தேசிய அளவிலான கண்காணிப்பு (என்.எல்.எம் -NLM) ஏஜென்சிகளை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த ஏஜென்சிகள் மேற்கொண்ட மூன்று கட்ட ஆய்வு அறிக்கைகள் டெல்லியில் உள்ள சி.எம்.ஐ சமூக ஆராய்ச்சி மையம் மூலமாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு ஜனவரியில் 42 சிறப்புக் கண்காணிப்பு ஏஜெண்டுகள் 10 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களுக்குச் சென்றனர். அதே ஆண்டு மே மாதம் 45 பேர் 25 மாநிலங்களில் உள்ள 111 மாவட்டங்களுக்குச் சென்றனர். டிசம்பர் மாதம் 43 பேர் 24 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்களுக்குச் சென்றனர்.
இந்நிலையில், இந்த ஏஜெண்டுகள் சமர்பித்துள்ள அறிக்கையில், பிரதான் மந்திரி கிராமின் திட்ட நிதியை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி ஒன்று கட்சி நிதிக்காக கிராமப்புற பயனாளியிடம் இருந்து குறிப்பிட்ட அளவு தொகையை பிடித்தம் செய்கிறது என்று தெரியவந்துள்ளது. இதேபோல், பீகாரில் பஞ்சாயத்து அதிகாரிகள் பயனாளியிடம் இருந்து லஞ்சம் வசூலிக்கிறார்கள். ராஜஸ்தானில் கிராம செயலாளர் நிதியை மொத்தமாக நிறுத்தி விடுகிறார். மத்தியப் பிரதேசத்தில் சர்பஞ்ச் அதிகாரி "கட்டாயமாக" நிதியை பிடிங்கிக் கொள்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
முதல் கட்ட அறிக்கையில் "வாடகை கேட்டல் அல்லது ஊழல்" நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. ஆனால், இது "மிகக் குறைந்த எண்ணிக்கையில்" இருந்தாலும், "ஊழல் நடைமுறையை நோக்கி" சுட்டிக்காட்டுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Report on PMAY-G points to ‘bribes’ in Bihar, ‘cut’ in Bengal, ‘extortion’ in MP
மேற்கு வங்கத்தில் இருந்து இரண்டு தனித்தனி வழக்குகளை அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதாவது, கிராமப்புற பயனாளிகள் பஞ்சாயத்து உறுப்பினருக்கு தலா ரூ.10,000-க்கு ரூ.2,000 பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் சங்க்ரியால் தொகுதியில் ஒரு அரசியல் கட்சி பயனாளிகளிடம் இருந்து பணத்தை வசூலிப்பது பற்றியும் அறிக்கை கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஜலவர், அல்வார் மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில், ஏற்கனவே வீடு வைத்திருப்பவர்களுக்கு பிரதான் மந்திரி வீடு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ப்பூரில், நல்ல நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படுவதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட அறிக்கையில், மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள இந்தர்காத் கிராமப் பஞ்சாயத்தில், வீட்டு நிதிகள் சர்பஞ்சால் வலுக்கட்டாயமாக திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீகாரின் முசாபர்நகர் மற்றும் கதிஹார் மாவட்டங்களில் உள்ள பயனாளிகளிடம் பஞ்சாயத்து அதிகாரிகள் பணத்தை லஞ்சமாக வசூலிப்பதை கண்டுபிடித்ததாக கூறுகின்றன.
பீகாரின் முசாஃபர்பூரில் உள்ள சராயா தொகுதிக்கு உட்பட்ட பில்வாரா ரூப்நாத் (தெற்கு) என்ற இடத்தில் ஒரு பயனாளியிடம் இருந்து வார்டு உறுப்பினர் பணம் வசூலித்த வழக்கை விவரித்து, பயனாளியின் குடும்பம் "தொகையை செலுத்துமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது மற்றும் அச்சுறுத்தப்பட்டது" என்று அறிக்கை கூறுகிறது.
திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைக் கொட்டிட்டு காட்டும் 3வது கட்ட அறிக்கையில், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் பயனாளி தனது கணக்கில் முதல் தவணை செலுத்திய பிறகு, கிராமச் செயலாளர் அவரிடம் இருந்து ரூ. 5,000 கட்டாயப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"பயனாளி தனது வீட்டை கூரை மட்டம் வரை முடிக்க முடிந்தது. மேலும் வீட்டின் கட்டுமானத்தை முடிக்க அடுத்த தவணைக்கான அனுமதிக்காக காத்திருக்கிறார். ஆனால், உரிய அறிக்கை தாக்கல் செய்ய கிராமச் செயலாளர் மேலும் 10,000 ரூபாய் கேட்டதாக அவர் புகார் செய்தார். கட்டமைப்பின் தேவையான புவி-குறியிடல் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. வினவப்பட்டபோது, இந்தப் பிரச்சினை குறித்து தங்களுக்குத் தெரியாது என்று செயல்பாட்டாளர்கள் கூறினர், மேலும் இந்த விஷயத்தை விரைவில் கவனிப்போம் என்று உறுதியளித்தனர்" என்று அந்த 3வது கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநில ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“