Advertisment

கோலாகலமாக கொண்டாடப்பட்ட 73வது குடியரசு தினம்; ராஜபாட்டை நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே

விமானப்படையினர் சார்பில் ரபேல், இரண்டு ஜாகுவார்கள், MiG-29 UPG மற்றும் இரண்டு Su-30 MI போர் விமானங்கள் இந்த முறை சாகச நிகழ்வில் பங்கேற்றது. மொத்தமாக 75 போர் விமானங்கள் விண்ணில் பறந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

author-image
WebDesk
New Update
Republic Day 2022 cultural diversity on display at Republic Day parade

Republic Day 2022 : நாட்டின் 73வது குடியரசு தினம் ஒமிக்ரான் தொற்றுக்கு மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்தது. இன்று டெல்லி ராஜபாட்டையில் நடைபெற்ற நிகழ்வுகளின் சிறப்பு ஹைலைட்டஸை இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு டெல்லியில் தொடர்ந்து நிலவும் பனிமூட்டம் காரணமாக 10.30 மணிக்கு மேல் தான் குடியரசு தின விழா அணிவகுப்புகள் ஆரம்பமானது.

Advertisment
publive-image
பாதுகாப்பு வாகனங்களுடன் ராஜபாட்டையில் அணி வகுத்த பிரதமர் மோடியின் கார்

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களின் ஊர்திகள் இந்த குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ளவில்லை. 12 மாநிலங்களின் ஊர்திகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இந்திய விமானப்படையுடன் இணைந்த தூர்தர்ஷன்எ எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வுகளை தங்களின் பார்வையாளர்களுக்காக விமானத்தின் முன்பக்கம் மற்றும் காக்பிட் பகுதிகளில் பொருத்தப்பட்ட கேமராக்களை கொண்டு வான்வெளி காட்சிகளை ஒலிபரப்பியது.

ஆன்ச்சல் ஷர்மா தலைமையில் அணிவகுப்பு

96 கப்பற்படை வீரர்கள், 4 தலைவர்கள் உட்பட 100 அடங்கிய அணியை இன்று பெண் லெஃப்டினண்ட் கமாண்டர் ஆன்ச்சல் ஷர்மா தலைமை ஏற்று அணி வகுப்பை நடத்தினார்.

விமானப்படை

முதன்முறையாக கப்பற்படை விமானங்களுடன் இணைந்து விமானப்படையினர் போர் விமான சாகசத்தில் ஈடுபட்டனர். விமானப்படையினர் சார்பில் ரபேல், இரண்டு ஜாகுவார்கள், MiG-29 UPG மற்றும் இரண்டு Su-30 MI போர் விமானங்கள் இந்த முறை சாகச நிகழ்வில் பங்கேற்றது. மொத்தமாக 75 போர் விமானங்கள் விண்ணில் பறந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Republic Day 2022

கலாச்சார அணி வகுப்பு

இன்று டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற கலாச்சார அணி வகுப்பில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 480 கலைஞர்கள் தங்கள் மாநிலத்தின் நடனக்கலைகளை பறைசாட்டும் விதமாக நடனமாடினர்.

ஒட்டக அணி வகுப்பு

உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் குடியரசு தினத்தின் போது இந்தியாவில் ஒட்டக அணி வகுப்புகள் நடைபெறும். இன்று நடைபெற்ற அணி வகுப்பில் எல்லை பாதுகாப்பு படையினர் 'Hum hai seema suraksha bal, bahudaro ka dal' என்ற பாடலை இசைத்தபடி ஒட்டக அணிவகுப்பை மேற்கொண்டனர்.

மாநில ஊர்திகளின் ஹைலைட்

12 மாநிலங்களின் ஊர்திகள் மட்டுமே இந்த முறை அனுமதிக்கப்பட்ட நிலையில் மேகாலயாவிற்கு மாநில அந்தஸ்த்து வழங்கி 50 ஆண்டுகள் நிறைவுற்றதை குறிக்கும் விதமாக அவர்களின் ஊர்தி அலங்கரிக்கப்பட்டு அணி வகுப்பில் இடம் பெற்றது.

அதே போன்று மகாராஷ்ட்ரா மாநில ஊர்தியும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தது. அவர்களின் ஊர்தியானது பல்லுயிர் தன்மையை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கோவாவின் ஊர்தியில் கோவாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை காண முடிந்தது. உலக சகோதரத்துவத்தை நினைவு கூறும் விதமாக கோவாவின் ஊர்தியில் தாமரை பொருத்தப்பட்டிருந்தது.

பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெறும் விராட்

குடியரசுத் தலைவரின் பாதுகாப்பில் ஈடுபட்ட பாதுகாவலரின் குதிரை விராட் இந்த ஆண்டோடு ஓய்வு பெறுகிறது. அணி வகுப்புகள் முடிந்த பிறகு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அந்த குதிரையை தடவிக்கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi Republic Day 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment