சித்தராமையாவின் வாகனம் செல்வதற்காக பெங்களூரு எம்.ஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும், ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியதாகவும் ரிபப்ளிக் கன்னட டிவி, பொய்யான செய்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Republic TV’s Arnab Goswami and Kannada editor booked over ‘false news’ on Siddaramaiah
கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து பொய்யான செய்திகளை ஒளிபரப்பியதாக ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் கன்னட எடிட்டர் நிரஞ்சன் ஆகியோர் மீது கர்நாடகாவில் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு எஸ்.ஜே. பார்க் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதன்கிழமை இரவு 7.15 மணியளவில், சித்தராமையாவின் வாகனம் செல்வதற்காக எம்.ஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும், ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியதாகவும் ரிபப்ளிக் கன்னடா பொய்ச் செய்தியை ஒளிபரப்பியது என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நேரத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா அப்போது பெங்களூருவில் இல்லை, மைசூருவில் இருந்ததாக ரவீந்திரா தனது புகாரில் கூறியுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன், பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ரிபப்ளிக் கன்னட சேனல் பொய்யான செய்திகளை ஒளிபரப்பியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“