/indian-express-tamil/media/media_files/2024/11/26/FkIWROzlob4mOHAFUQY0.jpg)
RBI Governor Shaktikanta Das: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ்
RBI Governor Shaktikanta Das Admitted to Chennai’s Apollo Hospital: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் உடல்நலம் சரியில்லாததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னரான சக்திகாந்த தாஸ் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. தற்போது 67 வயது ஆகும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் சக்திகாந்த தாஸ்க்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவர்களின் தகவல்படி, சக்திகாந்த தாஸ் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை எனவும், சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும் சக்திகாந்த தாஸ்க்கு அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.