கேரளாவை போன்றே சி.ஏ.ஏவுக்கு எதிராக தீர்மானம்... 11 மாநிலங்களுக்கு பினராயி கடிதம்!

இது போன்ற தீர்மானங்களால் ஒன்றுமே செய்துவிட இயலாது. இது நாடாளுமன்ற வரம்புகளுக்கு உட்பட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்

இது போன்ற தீர்மானங்களால் ஒன்றுமே செய்துவிட இயலாது. இது நாடாளுமன்ற வரம்புகளுக்கு உட்பட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Resolution against CAA Pinarayi Vijayan

Resolution against CAA Pinarayi Vijayan : பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானில் இருந்து இந்தியா வரும் முஸ்லீம்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பாஜக கூட்டணியில் ஆட்சி அமைத்திருக்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரளாவில் பின்பற்றப்பட்டது போன்றே அம்மாநிலத்திலும் சி.ஏ.ஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

Advertisment

கேரள முதல்வரின் முடிவுக்கு இணங்க, இந்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிராசாத்துக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சி.ஏ.ஏ எதிராக தங்களின் கருத்தினை பதிவு செய்யும் இந்திய மாநிலங்கள், இந்நாட்டில் ஏற்பட இருக்கும் பாதுகாப்பு குறித்து தங்களின் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டத்திற்கு புறம்பாக உள்ளே வரும் நபர்கள் சி.ஏ.ஏவை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டவுன்ஹால் கேதரிங்கில் பேசிய போது “ஒரு நாட்டில் வாதம் நடைபெற்றால் அது வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தருவது குறித்து இருக்க வேண்டுமே தவிர, பிறப்பு சான்றிதழ் இல்லத காரணத்தால் மக்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று இருக்க கூடாது” என்று குறிப்பிட்டார். மேலும் இந்த சட்டத்தை முழு நாடும் எதிர்க்க வேண்டும்.இது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என இரு தரப்பினருக்கும் தான் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார். கேரளாவை போன்றே டெல்லி சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா என்று கேள்வி எழுப்பிய போது, இது போன்ற தீர்மானங்களால் ஒன்றுமே செய்துவிட இயலாது. இது நாடாளுமன்ற வரம்புகளுக்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

 

publive-image

இந்த நேரத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறி பினராயி விஜயன் ஆந்திரா, பிகார், டெல்லி, ஜார்கண்ட், மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், ஒடிசா, பஞ்சாப், புதுவை, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சி.ஏ.ஏ-வால் சமூகத்தில் முக்கிய பங்கு வகுக்கும் இனத்தினர் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளனர். இந்திய ஜனநாயகம் மற்றும் சமயசார்பற்ற தன்மையை காப்பாற்ற விரும்பும் அனைத்து இந்தியர்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் என்.பி.ஆர். (தேசிய மக்கள்தொகை பதிவேடு தயார் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

To read this article in English

சி.ஏ.ஏவுக்கு எதிரான தீர்மானத்திற்கு கேரள பாஜக எம்.எல்.ஏ. ஓ. ராஜகோபால் தவிர அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சி.ஏ.ஏவுக்கு எதிரான கருத்து மற்றும் நிலைப்பாட்டினை உடையவர்கள் இது போன்ற தீர்மானங்களை மேற்கொண்டால் மட்டுமே சி.ஏ.ஏவுக்கு மற்றும் என்.ஆர்.சி.-யை ஆதரிப்பவர்களின் கண்களை திறக்க வைக்க இயலும் என்றும் விஜயன் அறிவித்துள்ளார்.  கேரள முதல்வரின் தீர்மானம் குறித்து தன்னுடைய கடிதத்தில் அம்ரிந்தர் சிங் ”இது அம்மாநில மக்களின் அறிவையும் அவர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகள் குறித்தும் காட்டுகிறது. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் பிரதிநிகள். இது பாராளுமன்ற நடவடிக்கை மட்டும் கிடையாது. மக்களின் பிரதிநிதிகள் இது போன்ற கருத்துகளை மற்றவர்களுக்கு அறிவிப்பதும் அரசியல் சாசன கடமையாகும் என்று கூறியிருந்தார்.

Pinarayi Vijayan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: