scorecardresearch

தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் : தன் நிலைப்பாடு குறித்து ஆராயும் இந்தியா

தாலிபான்கள் மீது இந்தியாவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத காரணத்தால் இந்தியா இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காது என்று ஜமிர் கபுலோவ் தெரிவித்திருந்தார்.

Response to Taliban

Rakesh Sinha

ஞாயிற்றுக்கிழமை அன்று தாலிபான் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய் வெளியிட்டுள்ள முன்மொழிவுகளை குறிப்பிடுவதன் மூலம், புது டெல்லி, இந்த் பிராந்தியத்தில் உருவாகும் புதிய அதிகார அமைப்பை நன்கு அறிந்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பே, ஆப்கானிஸ்தான் மீதான நிலைப்பாட்டை இந்தியா மாற்ற வேண்டும் என்று ரஷ்யா நினைவூட்டியது என்று அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.

ஜூலை 28ம் தேதி அன்று முல்லா அப்துல் கானி பராதர் என்பவர் தலைமையிலான தாலிபான் அமைப்பை சந்தித்து பேசிய சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, தாலிபான்கள் குறித்த தங்களின் நிலைப்பட்டை பொதுவெளியில் அறிவித்தார். ஆப்கானிஸ்தான் தாலிபான், ஒரு முக்கியமான அரசியல் மற்றும் ராணுவ சக்தியாகும். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பில் முக்கியமான அமைப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

தாலிபான்கள் காபூலை கைப்பற்றுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 11ம் தேதி அன்று, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அடங்கிய ஆப்கானிஸ்தான் மீதான விரிவாக்கப்பட்ட ட்ரொய்கா அமைப்பு கத்தார் தலைநகர் தோஹாவில் ஆலோசனை மேற்கொண்டது.

ஆப்கானிஸ்தானிற்கான ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடினின் சிறப்பு தூதர் ஜமிர் கபுலோவ், இந்த மேடையில் இந்தியாவுக்கு இடம் இல்லை என்பதை தெளிவாக கூறினார்.

தாலிபான்கள் மீது இந்தியாவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத காரணத்தால் இந்தியா இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காது என்று ஜமிர் கூறியதாக ஜூலை 20ம் தேதி அன்று இந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய செய்தி நிறுவனம் டாஸ் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இரு பக்கமும் செல்வாக்கு உள்ள நாடுகள் இதில் பங்கேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கபுலோவ் புதிய பிராந்திய கட்டமைப்பை-ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான், தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் அனைத்து பங்குகளையும் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு, மோதலுக்கு பிந்தைய காலத்தில் (என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தி) இந்தியா தன்னுடைய பங்கை வகிக்க முடியும் என்று அவர் கூறினார்.

“இந்தியாவின் எதிர்கால முயற்சிகள், மேலும் விரிவாக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே வரவேற்கப்படும். இந்த விரிவாக்கப்பட்ட வடிவம் ஆப்கானிஸ்தானின் மோதலுக்கு பிந்தைய வளர்ச்சியை உள்ளடக்கும். இங்கே, இந்தியாவின் செல்வாக்கு மற்றும் அதன் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கவை, “கபுலோவ் கூறினார்.

ஆப்கானிஸ்தானுடனான கபுலோவின் வரலாறு 80களில் ரஷ்யா ஆக்கிரமிப்பில் துவங்கி 2004ம் ஆண்டு தூதுவராக பணியாற்றியது வரை நீடிக்கிறது. இது அவரை இந்த பேச்சுவார்த்தைகளில் மிக முக்கிய காரணியாக மாற்றியுள்ளது.

புதிய கட்டமைப்பை வடிவமைக்கும் நாடுகளின் தலைவர்களுக்கு புடின் அழைப்புகளைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் ரஷ்யர்கள் வெளியிட்ட அறிக்கைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இவை ஒவ்வொரு உறவையும் வேறுபடுத்தும் நுணுக்கங்களை எடுத்துக்காட்டுகின்றன.

ஆகஸ்ட் 24 அன்று, ஜி 7 வெளியுறவு குழு தலைவர்கள் தாலிபான்களைக் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பைக் கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டனர். இந்த ஜி 7 கூட்டத்திற்கு இந்தியா அழைக்கப்படுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று கூறியபோது, புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருந்தார்.

இந்த உரையாடலின் போது, கூட்டாளி நாடுகள் ஒன்றாக பணி புரிவது மிகவும் முக்கியமானதாகும். மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க அறிவுறுத்தி உள்ளதாக புதுடெல்லியில் கூறியது.

ஆனால் ஒத்துழைப்பை ஆதரிப்பதற்கான அவர்களின் உறுதிப்பாடு மற்றும் நிரந்தர தீர்வுகளை காண இரட்டை வழிகளை உருவாக்குதல் ஆகியவை ரஷ்ய அதிபரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் புடினின் உரையாடல்கள் பற்றிய ரஷ்ய அறிக்கைகளை இப்போது கவனியுங்கள். இந்த பேச்சுவார்த்தைகள், ஒரு நாள் கழித்து ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை இதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் சீன மற்றும் ரஷ்ய தலைமைகள் கூறியுள்ளனர்.

இம்ரான் கானுடனான புடினின் உரையாடலில், ஒரு உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்க உதவும் ஆப்கானிஸ்தான் இடையேயான உரையாடலை நிறுவுவதன் அவசியத்தை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் பிரச்சனைகளை அணுகுவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மைக்கான எஸ்.சி.ஓ-வின் திறன்களை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை அடிகோட்டிட்டு காட்டியது.

தாலிபான் காபூலை கைப்பற்றி 3 நாட்கள் கழித்து ஈரானிய அதிபர் இப்ராஹீம் ராய்ஷி புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தானில் அடுத்து என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை நீடித்தது. இந்த அமைப்பில் முழு உறுப்பினர் சேர்க்கைக்காக ஈரான் சமர்ப்பித்த விண்ணப்பத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு துஷான்பேயில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. தனிப்பட்ட தொடர்புகளைப் பேண இது ஒப்புக் கொள்ளப்பட்டது.

தெளிவாக, இந்த தலைவர்களை புடின் அணுகுவது புதிய யதார்த்த அவசரத்தை அதிகரிக்கிறது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு பிராந்திய கட்டமைப்பு மற்றும் நிரந்தனர் ஆலோசனை தேவையையும் இது அதிகரிக்கிறது என்றும் அவர்கள் கூறினார்கள்.

: அமெரிக்காவுடனான உறவைப் பொருட்படுத்தாமல் தேர்வுகள் செய்யப்பட வேண்டும் மற்றும் நிலைகள் அளவீடு செய்யப்பட வேண்டும் என்பது இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். தாலிபான்கள் மீண்டும் வந்தது கசப்பானது ஆனால் அதனை நாம் சமாளிக்க வேண்டும் என்று ஜெர்மன் தலைவர் ஆஞ்சலா மெர்கெல் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Response to taliban russia china pak in new regional structure india calibrates stand