ரெஸ்டோ பார் கொலை வழக்கு: புதுச்சேரி கலால் போலீஸ் துறைதான் முழு காரணம் - அ.தி.மு.க குற்றச்சாட்டு

புதுச்சேரியில் ரெஸ்டோ பார் கொலை வழக்கில், கலால் மற்றும் போலீஸ் துறைதான் முழு காரணம் என்று புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் ரெஸ்டோ பார் கொலை வழக்கில், கலால் மற்றும் போலீஸ் துறைதான் முழு காரணம் என்று புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
PDY AIADMK Anbalagan

புதுச்சேரி மாநில அ.தி.மு,க செயலாளர் அன்பழகன்

புதுச்சேரியில் ரெஸ்டோ பார் கொலை வழக்கில், கலால் மற்றும் போலீஸ் துறைதான் முழு காரணம் என்று புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

புதுச்சேரி மாநில அ.தி.மு,க செயலாளர் அன்பழகன்  புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடத்த 9-ம் தேதி புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள ரெஸ்டோ பாரில் நடைபெற்ற கொலை என்பது ஒரு தற்செயலான நிகழ்வாகும். அந்த கொலையை மூடி மறைக்கவும் கொலை சம்பந்தமான முன்னுக்கு பின் முரணான தகவல்களை காவல்துறையினர் முன்னெடுத்துச் செல்வது தவறான ஒன்று. 

இது சம்பந்தமாக காவல்துறையின் உயர் அதிகாரியின் அறிக்கையில் சம்பவம் நடைபெற்ற உடனேயே ரெண்டே நிமிடத்தில் காவலர்கள் அங்கு வந்தனர் என்றும் அடுத்த ஒரு நிமிடத்தில் மருத்துவமனைக்கு அடிபட்டவரை அழைத்துச் சென்றதாகவும் கூறி இருக்கிறார். உண்மையில் இந்த சம்பவம் நடந்தது இரவு சுமார் 1:30 மணி அளவில், அடிபட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது இரவு சுமார் 2.15 மணிக்கு. அடிபட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஏற்றப்பட்ட காரின் சாவியை 2 காவலர்கள் பிடுங்கி வைத்துக் கொண்டதால் அடிபட்டவர் நேரத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அதனால், அவருக்கு மரணம் ஏற்பட்டது.

Advertisment
Advertisements

புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள ரெஸ்டோ பார்கள் இரவு 12 மணிக்கு எல்லாம் மூடப்பட வேண்டும் என்று காவல் துறை விதி இருக்ன்றது. ஆனால், இரவு 3 அல்லது 4 மணி வரை அந்த ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, அந்த ரெஸ்டோ பார்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மதுவிருந்து, டிஜே ஆட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு கலால் துறையோ, வருமானவரித் துறையோ உள்ளாட்சித் துறையோ, காவல் துறையோ அனுமதி வழங்கவில்லை. அரசின் எந்தத் துறையும் அனுமதி வழங்காத நிலையில் ஒவ்வொரு ரெஸ்டோ பாரிலும் டிஜே நாட்டியம் நடனம் ஜோடி ஜோடியாக டான்ஸ் மியூசிக்கல் வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த எப்படி முடிகிறது. 

அரசின் எந்தத் துறையும் அனுமதி வழங்காத நிலையில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்ற ரெஸ்டடோ பார்கள் மீது காவல்துறையோ அல்லது கலால் துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ரெஸ்டோ பாரில் உணவு சாப்பிடும் நபர்களுக்கு மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்படுவது ரெஸ்டோ பார் எப்.எல்.டு உரிமை ஆகும். இந்த டூரிஸ்ட் எப்.எல்.டு கலால் துறை மூலம் வழங்கப்படுவதில் வேறு எந்த நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்வதற்கும் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. நகராட்சி நிர்வாகமும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், ரெஸ்டாரண்டில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு ஒவ்வொரு ரெஸ்டோ பார் உரிமையாளர்களும் இதுபோன்று இன்னிசை நிகழ்ச்சிகள் ஜோடி ஜோடியாக நாட்டியம், நடனம், அரைகுறை டான்ஸ் ஆகியவற்றிற்கு அரசின் எந்த துறையின் அனுமதி இன்றியும் சட்டவிரோதமாக இன்று வரை நடத்தி வருகின்றனர். 

இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கலால் துறை,உள்ளாட்சித் துறை ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுபோன்று சட்டவிரோத நிகழ்ச்சிகள் நடத்துவதை சம்பந்தப்பட்ட துறைகள் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுத்தாலே புதுச்சேரியின் நகரப் பகுதியில் பல சட்டவிரோத செயல்கள் தடுத்து நிறுத்தப்படும். சுற்றுலா என்கின்ற பெயரில் தினந்தோறும் ஏற்படும் கலாச்சார சீரழிவுகள் தடுக்கப்படும் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவமும் நடைபெற்று இருக்காது.

புதுச்சேரியில் செயல்படும் டெஸ்டோபர்கள் அரசின் எந்தத் துறையின் அனுமதியும் பெறப்படாமலேயே சட்டவிரோத நிகழ்வுகள் ஒவ்வொரு ரெஸ்டோ பார்களிலும் நடத்தப்படுகின்றன என அதிமுக சார்பில் நான் பகிரங்கமாக அரசின் மீது குற்றம் சுமத்திருக்கிறேன். அரசிடம் இதற்கு பதில் இல்லை .அவர்கள் இது போன்ற டான்ஸ் நடத்துபவர்களுக்கு இந்த துறை அனுமதி அளித்துள்ளது என நிரூபிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

பலமுறை முதலமைச்சர் மற்றும் அரசிடம் அ.தி.மு.க சார்பில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசால் சுற்றுலா பயணிகளுக்காக வழங்கப்படுகின்ற ரெஸ்டோபார் உரிமத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோத விரும்பத் தகாத மியூசிக்கல் மற்றும் அரைகுறை நாட்டியம் மற்றும் ஜோடி ஜோடியாக நடனம் ஆடப்படுவது குறித்து பலமுறை புகார் அளித்தோம் .அரசு இதில் எது நடவடிக்கை எடுக்கவில்லை. 

எனவே, துணைநிலை ஆளுநர் புதுச்சேரி நகரப் பகுதியில் நடத்தப்படுகின்ற ரெஸ்டோ பார்கள் உணவு சாப்பிட வருபவர்களுக்கு மதுபானம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்கின்ற அனுமதி வழங்கப்பட்டதை பயன்படுத்திக் கொண்டு அந்த ரெஸ்டோ பார்கள் டிஜே மியூசிக்கல் அரைகுறை  ஆடை நாட்டியங்கள் நடத்தப்படுவது குறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இது போன்ற அனுமதியின்றி நடத்தப்படுகிற, இந்த சட்டவிரோத செயல்களை அனுமதித்த எந்த துறையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் மீது பாரபட்சமற்ற முறையில் துணைநிலை ஆளுநர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெஸ்டோ பாரில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் அனைத்திற்கும் காவல்துறை தான் முழு காரணம். நடைபெற்ற கொலைக்கு முதலமைச்சர் தான் காரணம் எனவே முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா அறிக்கைவிட்டுள்ளார். 

ஆனால், அவர் தொகுதியில் சந்தனம் எண்ணெய் தயாரித்தல், போலி மதுபான தொழிற்சாலை, மதுபான கடத்தல் போன்றவை நடைபெற்று வருகிறது.

எனவே, எதிர்கட்சி தலைவர் சிவா தனது தொகுதியில் நடைபெற்ற சட்டவிரோத செயல்களுக்கு பொருப்பேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வாறா?” என்று புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கூறினார். 

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, புதுச்சேரி அ.தி.மு.க அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில கழக இணைச்செயலாளர் ஆர்.வி. திருநாவுக்கரசு,மாநில கழகப் பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில கழக துணைச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாநில அண்ணா தொழிற்சங்க சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: