/tamil-ie/media/media_files/uploads/2022/09/kashi-mathura-1200.jpg)
காசி, மதுரா ஆலயங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி - சிருங்கார் கௌரி வழக்கில் வழக்கை தொடரலாம் என மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவாக 2019 நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியான போது பிரதமர் நரேந்திர மோடி, “கடந்தகால கசப்புணர்வுகளை மறக்கும் தருணம்” எனக் கூறினார்.
இந்த நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா பிரச்சினையை ஆர்.எஸ்.எஸ் இப்போது எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்குப் பதிலளித்த அதன் தலைவர் மோகன் பகவத், “ஒரு வரலாற்று பின்னணி காரணமாக, சங்கம் தொடர்பு கொண்டது. இந்த இயக்கம் (அயோத்தி) ஒரு அமைப்பாக செயல்பட்டது. இது விதிவிலக்கான ஒன்று” என்றார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமை இரண்டும் நாடு முழுவதும் உள்ள தங்கள் பிரிவுகளுக்கு தீர்ப்பின் மீது எந்தவிதமான வெற்றியையும் தவிர்க்க கடுமையான உத்தரவுகளை வழங்கியுள்ளன.
எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுடன் வாரணாசியிலும், மதுராவிலும் சட்ட நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய மூத்த பாஜக தலைவர், “புதிய முன்னேற்றங்கள்" புதிய விவாதங்களைத் தூண்டிவிட்டதாகவும், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991ஐ மறுபரிசீலனை செய்வதாகவும் இருக்கலாம் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இந்தச் சட்டம், ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த வழிபாட்டுத் தலங்களின் தற்போதைய நிலையை முடக்குகிறது. உச்ச நீதிமன்றம், அதன் அயோத்தி தீர்ப்பில், "நமது மதச்சார்பற்ற மதிப்புகளின் இன்றியமையாத அம்சத்துடன்" அதை இணைத்தது.
மே மாதம், இந்து தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் ஞானவாபி மசூதியின் வீடியோகிராஃபியின் போது ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர்.
அப்போது உத்தரப் பிரதேச., துணை முதல்வரும், முன்னாள் வி.எச்.பி., தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா, "நீங்கள் எவ்வளவு உண்மையை மறைத்தாலும், ஒரு நாள் அது வெளிச்சத்திற்கு வரும், ஏனெனில் சத்யம் சிவன். அவரை போற்றுவோம்” என்றார்.
இதை பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான வினய் சஹஸ்ரபுத்தேயும் எதிரொலித்தார்: “சத்யா ஹி ஷிவ் ஹை, ஷிவ் ஹி சுந்தர் ஹை #ஞானவாபி”.
கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால், பூஜையை "உடனடியாக" மீட்டெடுக்க வேண்டும் என்றார்.
இது வழிபாட்டு தலங்கள் சட்டத்திற்கு "நேரடி சவாலாக" இருக்கும் என்று அவர் ஒப்புக்கொண்டார். "மசூதியில் சிவலிங்கம் கண்டெடுப்பது எல்லாவற்றையும் மாற்றுகிறது" என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, “அது சிவலிங்கம், கல் நீரூற்று அல்ல என்று நிரூபிக்கப்பட்டால், மசூதியின் பராமரிப்பாளர்கள் கூறுவது போல், உலகில் உள்ள எந்த சக்தியாலும் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது.
பிறகு ஆட்டம் முடிந்தது. சிலைகளோ தெய்வங்களோ பூஜை இல்லாமல் இருக்க முடியாது என்பதால், பூஜையின் மறுசீரமைப்பு உடனடியானது” என்றார்.
மேலும், “"உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு, அயோத்தியை விட காசி முக்கியமானது" என்று மற்றொரு பாஜக தலைவர் கூறினார்.
தொடர்ந்து, “முகலாயர்களால் அழிக்கப்பட்ட எண்ணற்ற கோவில்களில்" காசி, மதுரா மற்றும் அயோத்தி ஆகியவவை மறுசீரமைக்கப்படும்.
முன்னர், எல் கே அத்வானிஜி ராமர் பிறந்த இடத்தை முஸ்லிம் சமூகம் வழங்க ஒப்புக்கொண்டால், மற்றவர்களுக்காக பாஜக தனது பிரச்சாரத்தை கைவிடலாம் என்று பரிந்துரைத்தார்” என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், அவரது கூற்றுப்படி, அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் "முஸ்லீம்களால் அல்ல, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் தலைவர் கூறினார்.
"சமீபத்திய முன்னேற்றங்கள் இந்து ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக உள்ளன" என்று கூறிய அவர், "இது ஆர்எஸ்எஸ் அல்லது பிஜேபி அல்ல… பொதுவாக, இந்துக்கள், அங்கு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதை மீட்க வேண்டும் என்றே நினைவார்கள்” என்றார்.
காசி தொடர்பான முன்னேற்றங்களும், மதுரா மீதான நீதிமன்ற நடவடிக்கைகளும், இந்த விவகாரத்தில் மௌனத்தை உடைக்கும் நோக்கில் பாஜகவைத் தள்ளுகின்றன.
ஏனெனில், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் மாற்றங்களைக் கோரலாம். இறுதியில், சட்டம் மாற்றப்பட வேண்டும். இது கடவுளால் உருவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இது பாராளுமன்றத்தால் செய்யப்பட்டது, அது விரும்பாவிட்டாலும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக மாறும், ”என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
என்னதான் நடந்தாலும், பாஜகவின் இந்துத்துவா இயக்கத்தின் சமீபத்திய அத்தியாயத்தை இது குறிக்கலாம். ஜூன் 1989 பாலம்பூர் தீர்மானம், அயோத்தி மீதான அதன் உரிமைகோரல்களை ஆதரிக்காத நீதிமன்ற உத்தரவுகளை நிராகரித்தது.
இந்த சர்ச்சையின் தன்மை என்னவென்றால், அதை நீதிமன்றத்தால் தீர்க்க முடியாது என்று கூறியது.
அந்தத் தீர்மானத்தில், “உரிமை, அத்துமீறல், உடைமை போன்ற பிரச்சினைகளை நீதிமன்றத்தால் தீர்க்க முடியும். ஆனால், பாபர் உண்மையில் அயோத்தி மீது படையெடுத்து, கோயிலை அழித்து, அதற்குப் பதிலாக மசூதியைக் கட்டினாரா என்பதைத் தீர்ப்பளிக்க முடியாது. ஒரு நீதிமன்றம் இதுபோன்ற உண்மைகளை உச்சரித்தாலும், வரலாற்றின் அழிவைத் திரும்பப் பெறுவதற்கான தீர்வுகளை அது பரிந்துரைக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.