Advertisment

மீண்டும் வருமா ஊரடங்கு? மாநில அரசுகளுடன் ஆலோசிக்கும் மோடி!

கடந்த சில மாதங்களாக மருத்துவ நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நமக்கு அதிகம் உதவியுள்ளது

author-image
WebDesk
New Update
PM Modi greets nation on Diwali, to spend the day with soldiers in Jaisalmer

 Kaunain Sheriff M

Advertisment

Rethink short lockdowns, tracing is key: PM Modi to states :  கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் 7 மாநில முதல்வர்களை, சில மாநிலங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 1-2 நாட்கள் ஊரடங்கினை பின்பற்ற முடியுமா என்ற மதிப்பீட்டு அறிக்கையை சமர்பிக்குமாறு, புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார். மேலும் அதில், பொருளாதார பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் மதிப்பீடு செய்யுமாறு கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, தடமறிதல் - கண்காணிப்பு முறையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளை வற்புறுத்தியுள்ளார். கொரோனா ஊரடங்கு நன்மைகளை அளித்துள்ளது. உலக அளவில், இதனை வரவேற்றுள்ளனர். நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதா என்பதை அறிய தற்போது நுண்ணிய பரவல் மண்டலங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 1-2 நாட்கள் ஊரடங்கினால் ஏற்பட்ட பலன்களை, அதனை அமல்படுத்திய மாநிலங்கள் மதிப்பீடு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். இதனால், பொருளாதார நடவடிக்கைகள் எந்த பிரச்சனைகளையும் சந்திக்க கூடாது. மாநிலங்கள் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு, பரிசோதனை, சிகிச்சை மற்றும் கண்காணிப்பினை தீவிரமாக கவனிக்க வேண்டும் என்றும் பிரதமர் மாநில அரசுகளிடம் கேட்டுக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

பிரதமருடன் நடைபெற்ற காணொளி காட்சியில் ஆந்திரா, கர்நாடகா, உ.பி, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் பங்கேற்றார்கள். இந்த நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களில் 63% நபர்களும், உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று கேஸ்களில் 65.5%மும், இறப்புகளில் 77%மும் இங்கு தான் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் காணப்படும் பிரச்சினைகளையும் மோடி மாநில அரசுகளுடன் பேசினார். ”மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு சேவைகள் மற்றும் பொருட்களின் இயக்கத்தில் ஏற்பட்ட குறுக்கீடு சாதாரண குடிமக்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது அவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் சப்ளை கிடைப்பதில் பிரச்சினைகள் உள்ளன. உயிர்காக்கும் ஆக்ஸிஜனை தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்”என்றார். மாநில முதல்வர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் தொகுதி மட்டங்களில், காணொளி காட்சி மூலம் ஆலோசனைகள் நடத்த வேண்டும் என்றும் அப்போது தான் கள நிலவரம் குறித்து அறிந்து கொள்ள இயலும் என்றும் கூறியுள்ளார் மோடி.

To read this article in English

இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த 7 மாநிலங்களில் இருக்கும் 60 மாவட்டங்கள் தான் பெரும் கவலையை அளிக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. மாநில முதல்வர்கள் 7 நாட்கள் சிறப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரம், காணொளி காட்சி மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் கள நிலவரத்தை அறிய வேண்டும். இது தீவிரத்தன்மை மற்றும் நேர்மையை வெளிக்கொணருகிறது என்ன்று அவர் கூறியுள்ளார். கோவிட் -19 சிகிச்சை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநில பேரிடர் மையத்தின் நிதியத்தின் (எஸ்.டி.ஆர்.எஃப்) பயன்பாட்டை 50 சதவீதமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

நாம் தொடர்ந்து உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்; கண்காணிப்பு மற்றும் தடமறிதல் பயிற்சியையும் நாம் பலப்படுத்த வேண்டும். இன்று, கோவிட் -19 உள்கட்டமைப்பை வலுப்படுத்த, மாநில பேரிடர் பதிலளிப்பு நிதி குறித்து ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, எஸ்.டி.ஆர்.எஃப் பயன்பாட்டை 35 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இந்த முடிவால் மாநிலத்திற்கு அதிக நிதி கிடைக்கும், ”என்றார்.

மற்ற மாநிலங்களிலிருந்து சிறந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு ஏழு மாநில முதல்வர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். "நம் நாட்டில் தற்போது அதிக அளவு சோதனைகள் மற்றும் குணம் அடைதல் நிகழ்ந்து வருகிறது. பல மாநிலங்கள் பல சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்தியுள்ளன. இந்த நடைமுறைகளிலிருந்து நாம் அதிகம் கற்றுக் கொண்டோம், அவற்றைப் பயன்படுத்திக் கொண்டோம். கடந்த சில மாதங்களாக மருத்துவ நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நமக்கு அதிகம் உதவியுள்ளது, ”என்று அவர் கூறினார்.

கூட்டத்தின் துவக்கத்தில், புதன்கிழமையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்து மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். "இரண்டு ஆண்டுகளில், 1.25 கோடிக்கும் அதிகமான ஏழை நோயாளிகள் இந்த திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று, இந்த வீடியோ மாநாட்டின் மூலம், ஏழைகளுக்கு சேவை செய்யும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் எனது சிறப்பு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், ”என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India Coronavirus Narendra Modi Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment