Avishek G Dastidar :
இத்தனை ஆண்டுகள் வரலாற்றில் ரயில்வே நிர்வாகம் சந்திராத சம்பவம் ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது. பல ஆண்டுகள் முயற்சிக்கு பின்பு ஆணாக இருந்து பெண்ணாக மாறிய 32 வயதுமதிக்கதக்க பெண் ரயில்வேஸ்- ல் பணிப்புரிந்து ஓய்வு பெற்ற தனது தந்தையின் பென்சனை கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அவரின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்துள்ளார். அவரின் இறப்புக்கு பின்பு அதுவரை அவரின் குடும்பத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த பென்சனை நிறுத்தப்பட்டது. காரணம், இந்திய ஓய்வுதிய திட்டத்தின்படி ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் இறந்து விட்டால் அவரின் குடும்பத்தில் 25 வயதுக்கு மேல் ஆண் மகன் இருந்தால் பென்சன் வழங்கப்பட மாட்டாது. அதே நேரம் அவரின் குடும்பத்தில் பெண் பிள்ளை இருந்தால் அவர் திருமணம் ஆகாது அல்லது விவகாரத்து பெற்றவராக இருந்தால் மாதந்தோறும் பென்சன் வாங்க தகுதியுற்றவர்.
இதுவரை இந்த சட்டமுறைப்படியே ரயில்வே பென்சன் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் முதன்முதலாக ஆணாக இருந்து தற்போது பெண்ணாக மாறியுள்ள பெண் பென்சன் கேட்டு நீதிமன்றம் வரை சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடிதம் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை தெற்கு ரயில்வே துறைக்கு அனுப்பட்டது. அதன் பின்பு அவர்கள் கடிதத்தில் இருக்கும் குழப்பத்தை புரிந்துக்கொண்டு அந்த கடிதத்தை பணியாளர் ஓய்வூதியம் மற்றும் பொது குறைகளை கேட்டும் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியன் ரயில்வே துறையின் 160 ஆண்டு கால வரலாற்றில் இதுப்போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. அதனாலே இதுக் குறித்து முடிவு எடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக மூத்த ரயில்வே துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
அதே போல் இந்த கடிதத்தை எழுதியுள்ள பெண், தனது தந்தையின் இறப்புக்கு முன்பே பெண்ணாக மாறி இருந்து, அவர் திருமணம் ஆகாதவராக இருந்து இருந்தால் அவருக்கு பென்சன் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தமிழ்நாடு திருநங்கைகள் நல சங்க அடையாள அட்டையை அந்த பெண் கடிதத்துடன் சமர்பித்துள்ளார். இதனால் இந்த வழக்கு ஆரம்பத்தில் ஒரு திருநங்கை சம்மந்தப்பட்ட வழக்காகவே பார்க்கப்பட்டது என மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்போது ரயில்வே ஓய்வுதிய சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் இதுக் குறித்து முடிவு எடுக்க நீண்ட அவகாசம் தேவைப்படுகிறது எனவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுக் குறித்து அந்த பெண்ணை தொடர்புக் கொண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பேச முற்ப்பட்ட போது அவர் கருத்து கூற மறுத்து விட்டார்.
இந்த கடித்தை எழுதிய பெண் இதுத்தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் இந்த கடிதம் டெல்லியில் செயல்படும் ரயில்வே தலைமையகத்திற்கு அனுப்பட்டுள்ளது. அங்கு மூத்த அதிகாரிகள் இந்த கடிதம் மீதான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் குடும்ப ஓய்வூதியச் சட்டம் 1871, மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள் 1972, மற்றும் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய பரிமாற்றம்) விதிகள் 1981, உள்ளிட்ட சட்டங்களில் பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.