தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, எக்ஸ்பிரஸ் அட்டா நிகழ்வில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பிரதமர் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
“நரேந்திர மோடி இந்தியாவுக்கான பிரதமர். ஆனால், அவர் குஜராத்திற்கான பிரதமர் போன்று செயல்படுகிறார்“ என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Revanth Reddy at Express Adda: PM Modi out to finish Opposition states, diverting investments to Gujarat
“கடந்த 2004 முதல் 2014-வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சோனியா காந்தியும், பிரதமராக மன்மோகன் சிங்கும் இருந்தனர். அந்த கால கட்டத்தில் குஜராத் மாடல் என நரேந்திர மோடி விளம்பரம் செய்தார். அப்போது, மோடிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்தது. அன்று எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான் குஜராத் மாடல் என உருவானது“ என்று ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால், இன்று பிரதமராக இருக்கும் மோடி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நிராகரிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடிவுக்கு கொண்டு வர அவர் செயல்படுகிறார். இது தான் குஜராத் மாடல்“ எனவும் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தெலங்கானாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் வந்தால், அவர்களை குஜராத்திற்கு செல்லுமாறு பிரதமர் அலுவலகம் கூறுகிறது. மோடி இந்தியாவுக்கான பிரதமர். ஆனால், அவர் குஜராத்துகான பிரதமர் போன்று செயல்படுகிறார்“ என்றும் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
“ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் உருவாக்குவது குறித்து மோடி பேசுகிறார். ஆனால், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அவர் சேர்த்துக் கொள்ளவில்லை. தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவற்றை தவிர்த்து ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தை எவ்வாறு உருவாக்குவார். மகாராஷ்டிரா இல்லாமல் எப்படி சாத்தியமாகும்? இந்தியாவின் பொருளாதார தலைமையிடம் மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிராவில் இருந்து 17 முதலீடுகள் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த குஜராத் மாடல் இந்தியாவிற்கு ஆபத்தானது“ என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
“'நேரு - காந்தி' என்ற குடும்பத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியினர் அணிதிரள வேண்டும். மோடி பரிவார் vs காந்திஜி பரிவார் என போராட வேண்டும். காங்கிரஸ் கட்சி டெஸ்ட் போட்டிகள் போன்ற வடிவத்தில் இருந்து 20 ஓவர் போட்டிகள் போன்ற வடிவத்திற்கு மாற வேண்டும். காங்கிரஸார், அரசியலை மனிதத் தன்மையுடன் பார்க்கின்றனர். பரிவர்த்தனை வழியில் பார்க்கவில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.
”மோடியின் மறைக்கப்பட்ட திட்டங்களை கடந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலம் காங்கிரஸ் வெளியே கொண்டு வந்துள்ளது. ஹரியானா தேர்தலுக்கு பின்னர் அவர், வளர்ச்சி குறித்து பரிசீலிக்கவில்லை. அடுத்த தேர்தல் குறித்து மட்டுமே பரிசீலித்தார்” என ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார்.
காந்தி குடும்பத்திற்கு தெலங்கானா "ஏடிஎம்" ஆகிவிட்டது என்ற மோடியின் கிண்டலைக் குறிப்பிட்ட அவர், "காந்தி குடும்பம் தெலங்கானாவை ஏடிஎம் ஆக்கியது என்று எந்த காரியகர்த்தாவும் இல்லை, பிரதமர் அவர்களே. காந்தி பரிவாருக்கு பணம் தேவை என்றால், அவர்கள் ஏன் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காந்தி குடும்பம் ஒரு தேசிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது, அதிகார அரசியல் அல்ல. நாட்டை ஒன்றிணைக்க, ராகுல் காந்தி பத்தாண்டுகளுக்கும் மேலாக அயராது உழைத்து வருகிறார்“ என்று அவர் தெரிவித்துள்ளார்..
"தெலங்கானாவில் சோனியா காந்தியின் பெயரைக் கூறி வாக்கு சேகரித்தோம். ஹரியானாவில் ராகுல் காந்தியின் பெயரை பயன்படுத்தி வாக்கு கேட்டிருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்
தேர்தலில் உள்ளூர் காரணிகளை சமாளிக்க. ஒரு பிராண்ட் தேவை. அதுவே மோடிஜி பரிவார் vs காந்திஜி பரிவார் ” என ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டார்.
"பிளவுபடுத்தும் அரசியலில் வெற்றி பெறுவது சாத்தியம். ஆனால், இதுபோன்ற அரசியலால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது கடினம்.
அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் தெலங்கானா மாதிரி வளர்ச்சி குஜராத் மாதிரிக்கு எதிரானது" என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.