Advertisment

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் : தனது குழுவினருடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ரிஹானா

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஜாம்நகரில் உள்ள விமான நிலையத்திற்கு ரிஹானா தனது குழுவினருடன் வந்து இறங்கினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rihana Entry In India

ரிஹானா தனது குழுவுடன் ஜாம்நகருக்கு வந்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு பாடல் பாட இருக்கும் பிரபல பாப் நட்சத்திரம் ரிஹானா தனது குழுவினருடன் குஜராத்தின் ஜாம் நகருக்கு வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண கொண்டாடடம் கலைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், பிரபல பாப் பாடகியான, ரிஹானா மற்றும் அவரது குழுவினர் இன்று (பிப் 29) குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்து இறங்கியுள்ளனர்.

ஆங்கிலத்தில் படிக்க : Rihanna’s luggage taken to Anant Ambani-Radhika Merchant pre-wedding event venue, prompts hilarious reactions

ரிஹானா வந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த வீடியோவில் ரிஹானாவின் பொருட்கள் அனைத்தும் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து இன்ஸ்டாகிராமில் வைரல் பயானி என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர்.

இந்த வீடியோ பதிவில், விமான நிலையத்திலிருந்து திருமண இடத்திற்கு பல கண்டெய்னர் அளவிலான சாமான்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. "ரிஹானாவின் நடிப்புக்கான சாமான்கள், இது நாங்கள் இதற்கு முன் பார்த்திராத ஒன்று, என்றும், இவை அனைத்மே பாடகர் மற்றும் அவரது குழுவினருக்கு சொந்தமானதா என்பது தெளிவாக இல்லை.

அதே சமயம் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் ஒருவர் ரெஹானா லாகேஜ் நடுத்தர வர்க்க குடும்பம் வீட்டிற்கு மாறுகிறது என்றும், மற்றொருவர், அவர் நிரந்தரமாக ஜாம்நகருக்குச் சென்றுவிட்டாரா என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்பு ரிஹானாவின் குழு விமான நிலையத்திற்கு வருவதைக் காண முடிந்தது. இந்த வைரலான வீடியோ, அலங்கரிக்கப்பட்ட விமான நிலையத்தில் தங்கள் கைபேசியில் தங்கள் வரவேற்பை படக்குழுவினர் படம் பிடித்த வீடியோ வெளியானது.

ரிஹானா, அரிஜித் சிங், தில்ஜித் டோசன்ஜ், அஜய்-அதுல் மற்றும் டேவிட் பிளேன் ஆகியோர் மார்ச் 1-3 வரை நடைபெறும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த், சல்மான் கான், அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபல இந்திய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mukesh Ambani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment