/tamil-ie/media/media_files/uploads/2017/12/sonia.png)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, சைக்கிளில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பாலிவுட் நடிகர் ரித்திஷ் தேஷ்முக் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி அண்மையில் பொறுப்பேற்றார். இதனால், சோனியா காந்தி தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவர் கோவாவில் தன் ஓய்வு நாட்களை செலவழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சைக்கிளில் சோனியா காந்தி மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை நடிகர் ரித்திஷ் தேஷ்முக் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ”இந்த புகைப்படம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அவர் மகிழ்ச்சியாகவும், உடல் நலத்துடன் இருக்க விரும்புகிறேன்”, என விரும்புகிறேன்”, என பதிவிட்டுள்ளார்.
Some pictures make you happy... this is one of them.
Wishing Sonia ji happiness and best of health. pic.twitter.com/SSITMjOnCD— Riteish Deshmukh (@Riteishd) 28 December 2017
நடிகர் ரித்திஷ் தேஷ்முக், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.