scorecardresearch

தேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு… லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது?

நான் அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை. ஒரு உறவினராக அவரை சந்தித்தேன்.

தேர்தல் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்பு… லாலுவிற்கு சாதகமாக அமைய இருப்பது எது?

Bihar Elections 2020 :  தன்னுடைய சிறை தண்டனையை ராஞ்சியில் இருக்கும் ரிம்ஸ் மருத்துவமனையில் கடந்த மே 2018ம் ஆண்டில் இருந்து அனுபவித்து வருகிறார் லாலு பிரசாத் யாதவ். அவருடைய பெயரும் 40 ஆண்டுகால பீகார் அரசியல் வரலாறும் பிரிக்க இயலாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்த வருடம் அவருடைய அரசியல் வாரிசான தேஜஸ்வி யாதவ் தன்னுடைய அப்பாவின் செல்வாக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்று போட்டியாளர்கள் எதிர்மறையான விமர்சனங்களை வைத்த போதிலும் அமைதியாகவே, இந்த தேர்தல் குறித்து எந்தவித தயக்கமும் இன்றி விலகி நிற்கிறார் லாலுபிரசாத் யாதவ்.

72 வயதாகும் லாலு பிரசாத் தொடர்ந்து அரசியல் நகர்வுகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். எப்போதும் செய்திகளை டிவியில் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவர் செய்தித்தாள்கள் வாசிப்பதில்லை. இருப்பினும் செவிலியர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை செய்திகளை வாசிக்க கூறி கேட்கிறார் என்கிறார் ஒரு வாரத்திற்கு முன்பு லாலுவை சந்தித்த பிர்சா முண்டா மத்திய சிறைச்சாலையில் இருக்கும் அதிகாரி.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

அவர் மேலும், நான் மருத்துவமனை சென்ற போது, அவர் மதிய உணவு உண்டு கொண்டிருந்தார். அப்போது தேஜ் பிரதாப் யாதவ்வின் பிரச்சாரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பார்க்க மிகவும் அமைதியாகவே இருந்தார். அவருடைய உடல்மொழி மிகவும் சாந்தமாக இருந்தது.லாலு பிரசாத் 2017ம் ஆண்டில் இருந்து, அவருடைய 1990 ஆட்சியின் போது நடைபெற்ற தீவன ஊழல் வழக்கில் ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறார். ஆனால் தன்னுடைய தண்டனையின் பெரும்பான்மையான காலத்தை ரிம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு உடல்நலக்கோளாறுக்காக அனுமதிக்கப்பட்டு அங்கே செலவிட்டு வருகிறார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் உருவாக்கு அல்லது உடைத்தெறி என்ற வகையிலான தேர்தல் இது. ஆனால் அவர் மிகவும் ந்நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த கூட்டணியால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது என்று ஜார்கண்ட் ஆர்.ஜி.டி. இளைஞர் அணி தலைவர் அபேய் சிங் கூறினார். லாலு, இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறியதாக கூறும் அவர், எந்நேரமும் லாலு விழித்த வண்ணமே இர்நுதார் என்றும் அனைத்து தேர்தல் செய்திகளையும் பின்பற்றி வருகிறார் என்றும் கூறினார்.

லாலுவிடம் செல்ஃபோன் இல்லை. வாரத்திற்கு ஒரு முறை அவரை பார்க்க வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். சில நாட்களுக்கு முன்பு கட்சி தொண்டர்கள் சிலர் அவரை காண வந்தனர். தேஜஸ்வி, பாலுவின் மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் இவரை வந்து சந்தித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக இருக்கிறது என்று கூறினார் சிறை துறை அதிகாரி. தேஜ் பிரதாப் ஒரு மாதம் முன்பு அவரை வந்து சந்தித்துள்ளார். தேஜை சந்திக்க லாலு ஆவலாக காத்திருந்ததாக கூறுகிறார் அவர். அவருடைய நண்பர் ஜித்தேந்திர யாதவ் உ.பியில் இருந்து லாலுவை வந்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

செப்டம்பர் மூன்றாவது வாரம் சில மணி நேரம் லாலுவை சந்தித்து பேசிய ஜித்தேந்திர யாதவ், லாலு நலமுடன் இருப்பதை கூறினார். அவருடைய சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டது. நான் அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை. ஒரு உறவினராக அவரை சந்தித்தேன். அவரை சில மாதங்களுக்கு ஒரு முறை நான் பார்ப்பேன் என்று கூறினார். லாலுவின் மகள் ஒருவரை ஜித்தேந்தரின் மகன் திருமணம் செய்துள்ளார்.

தேஜஸ்வி பிரச்சார மேடைகளில், லாலு நவம்பர் 9ம் தேதி வெளியே வந்துவிடுவார். நவம்பர் 10ம் தேதி நிதீஷ் குமாருக்கு பிரியாவிடை அளிப்போம் என்று கூறினார். நவம்பர் 10ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. லாலுவின் வழக்கறிஞர் லாலுவின் விடுதலை மீது தீர்மானமாக இருக்கிறார். சய்பாஷா மற்றும் டியோகர் ட்ரெசெரி வழக்குகளில் லாலு அவருடைய மூன்றரை வருட தண்டனை காலத்தை அனுபவித்துவிட்டார். தற்போது தும்கா ட்ரெசரி வழக்கு மட்டும் இருக்கிறது. அதிலும் 50% தண்டனை காலத்தை நிறைவு செய்யப் போகிறார் (7 ஆண்டுகள் தண்டனை). பின்பு நாங்கள் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளோம். நவம்பர் 9 தேதியில் அவர் நிச்சயமாக சிறையில் இருந்து வெளியே வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rjd chief waits for two verdicts court elections

Best of Express