ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவு LIVE: மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் உரை இங்கே (வீடியோ)
நான்காவது ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவில் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர், டெல்லியின் மற்றுக்க முடியாத கொள்கைக்கு அப்பால்: மாறிவரும் உலகில் இந்திய வெளியுறவுக் கொள்கை” என்ற தலைப்பில் பேசுகிறார்.
அமெரிக்கா முதல் சீனா வரை, பாக்கிஸ்தான் முதல் மத்திய கிழக்கு வரை - ஒரு மாறும் புவிசார் அரசியல் நிலப்பரப்பு வழியாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நேரத்தில் - வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கருக்கு அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களை உறுதியான விளைவுகளாக மாற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Advertisment
அமைச்சர் ஜெய்சங்கர் பதவியேற்று 5 மாதங்களில் புது டெல்லியில் வியாழக்கிழமை 4 வது ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவை நிகழ்த்துகிறார். ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவு தி எக்ஸ்பிரஸ் குழுமத்தால் 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவு LIVE: மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் உரை இங்கே (வீடியோ)
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதல் மூன்று ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவை நிகழ்த்தினர். இவர்களுக்குப் பிறகு நான்காவது ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவில் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர், டெல்லியின் மற்றுக்க முடியாத கொள்கைக்கு அப்பால்: மாறிவரும் உலகில் இந்திய வெளியுறவுக் கொள்கை” என்ற தலைப்பில் பேசுகிறார்.
சொற்பொழிவுக்குப் பிறகு, ஜெய்சங்கர் தி இந்தியன் எக்ஸ்பிரஸின் பங்களிப்பு ஆசிரியர் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனர் சி.ராஜா மோகனுடன் உரையாடுகிறார்.