அடுத்த 20 மாதத்தில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பாரதிய ஜனதா தீவிர கவனம் செலுத்திவருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் பாதுகாப்பு வளர்ச்சியை காட்ட எல்லைக்கு விஜயம் செல்லவுள்ளார்.
பி.எஃப் தடை உள்ளிட்ட விஷயங்களும் பேசப்படும். அதே நேரத்தில் ஜெ.பி. நட்டா நாடு முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
முன்னதாக கடந்த முறை சிறப்பாக செயல்படாத தொகுதிகள் என பாரதிய ஜனதாவில் 144 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இந்தத் தொகுதிகளில் மத்திய அமைச்சர்கள் ஒரு சுற்று பயணத்தை ஏற்கனவே நிறைவு செய்துவிட்டனர். அடுத்தக் கட்டமாக மாநில பொறுப்பு செயலர்களுடன் இணைந்துள்ளனர்.
இதற்கிடையில், பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை குறித்து உணர்ந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்.2) ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கு அப்பாற்பட்டு, கவலைக்குரிய விஷயங்கள் என்று இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டார்.
தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா) கவனிக்கப்பட்டுவருகிறது. பொதுவாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய சாத்தியமின்றி காணப்படுகின்றன.
அதேபோல் பாரதிய ஜனதாவையும் சில பிராந்திய கட்சிகள் எதிர்த்து வருகின்றன. மேலும் கேரளத்தில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதனை பாரதிய ஜனதா தலைவர் ஒருவர் கூறினார். அவரால் இதனை வழக்கம்போல் நிராகரிக்க முடியவில்லை.
இது குறித்து பாரதிய ஜனதா தலைவர் ஒருவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி அச்சுறுத்தலாக இருப்பார் என்பதல்ல. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸிற்கு ஒரு வலுவான அடித்தளம் உண்டு.
ஆக இந்த யாத்திரை தேர்தலில் கடின காலத்தை எதிர்கொள்ள செய்யலாம்” என்றார். எனினும் அவர்களின் துருப்புச் சீட்டாக பிரதமர் நரேந்திர மோடியே உள்ளார்.
மேலும், பிரதமரின் வெளியுறவுக் கொள்கை, ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது, உக்ரைன் நெருக்கடிக்குப் பிறகு புதிய முன்னேற்றங்களை அடைந்துள்ளன.
அவரிடம் சில குறைபாடுகள் இருந்தாலும் அவர் எதிர்க்கட்சிகளை விட முன்னணியில் உள்ளார். மேலும் பாஜக ஆட்சி மட்டுமின்றி கட்சியிலும் கவனம் செலுத்துகிறது.
மேற்கூறிய 144 தொகுதிகளில் இளம் தலைவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்சியில் முழு நேர பணியை தற்போதே தொடங்கிவிட்டனர்.
இந்த விஷயத்தில் போட்டியாளரான காங்கிரஸ் இன்னமும் எழுந்திருக்கவில்லை. கடந்த வாரம் மாநில பொறுப்பாளர்களுக்கு நடந்த கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா, பிரதமர் வலுவானவர். அதேநேரத்தில் கட்சியின் அமைப்பு இயந்திரமும் வலுவாக இருத்தல் வேண்டும்” என்றார்.
மேலும் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் அமித் ஷாவின் பேச்சின் முக்கிய அம்சமாகும்.
இதே செய்தியை கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil