காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, ராஜஸ்தானில் கடந்த 11 ஆண்டுகளான பினாமி நிலத்தின் மூலம் ஈட்டிய ரூ.106 கோடி வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியுள்ளது.
2010-11 முதல் 2020-21 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளில் இந்தத் தொகையை அவரது வருமானத்தில் சேர்க்க முன்மொழிந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தெரியவந்துள்ளது.
மேலும், M/S ஆர்டெக்ஸ், ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி, ஸ்கைலைட் ரியாலிட்டி, புளூபிரீஸ் டிரேடிங், லம்போதர் ஆர்ட்ஸ், நார்த் இண்டியா ஐடி பார்க்ஸ் மற்றும் ரியல் எர்த் ஆகிய ஏழு நிறுவனங்களின் வருமானத்தில் 2010-11 முதல் 2020-21 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளில் சுமார் ரூ.9 கோடியைச் சேர்க்க வருமான வரித்துறை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாமி பரிவர்த்தனைகள் (தடை) சட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் வரி ஏய்ப்பு செய்ததாக வதேராவுக்கு எதிரான துறையின் விசாரணை குறித்து, வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வதேராவின் வருமானம் மறைப்பு 106 கோடியும், ஏழு நிறுவனங்களின் 9 கோடி வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையிடம் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, வதேராவின் வழக்கறிஞர் சுமன் கைதானுக்கு மின்னஞ்சல் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் பதிலளிக்கவில்லை. பின்னர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக வதேராவை தொடர்பு கொண்டு பேசியபோது, பல ஆண்டுகளாக இதே காரணத்தை சொல்கின்றனர். தற்போது, எனது பெயரை வெளியிட சரியான நேரமாக அவர்களுக்கு அமைந்துள்ளது. இது, ஒரு தெளிவான தீங்கிழைக்கும் அரசியல் வேட்டையாகும். நீங்கள் என சட்டக் குழுவை ஏற்கனவே அனுகியுள்ளதால், தெளிவான பதிலை அளிப்பார்கள் என்றார்.
கிடைத்த தகவலின்படி, வதேரா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு வருமானம் குறைவாக இருப்பதாகக் கூறப்படும் ஐடி துறையின் குற்றச்சாட்டை எதிர்க்க வாய்ப்புள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 1961 இன் பிரிவு 270A இன் கீழ், வருமானத்தை குறைவாக அறிக்கை செய்ததற்காக செலுத்த வேண்டிய வரியில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். தவறான அறிக்கையின் காரணமாக குறைவாக அறிக்கையிடப்பட்டால், வரியில் 200 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டியியிருக்கும்.
2020 ஆம் ஆண்டில், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ லலித் நாகர், வதேராவின் முன்னாள் உதவியாளரான அவரது சகோதரர் மகேஷ் நாகர் ஆகியோருக்கு சொந்தமான பல இடங்களில் ஐடி துறை சோதனை நடத்தியது. இந்த தகவலை முதன்முதலில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தான் வெளியிட்டது. சோதனையில், ராஜஸ்தானில் நாகரின் கூட்டாளிகளால் வதேரா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு கணிசமான நில பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது.
தேசிய சோலார் மிஷன், மாநில அரசு வழங்கும் வரிச் சலுகைகள், நிலத்தின் மதிப்பு உயர்வு ஆகியவை மூலம் மகேஷ் நகரின் உதவியுடன் பிகானேர் மற்றும் ஜோத்பூரில் பினாமி பெயர்களைப் பயன்படுத்தி வதேரா நிலம் வாங்கியதாக ஐடி துறை குற்றம் சாட்டியுள்ளது
வதேரா சுமார் 106 கோடி வருமானத்தை மறைத்ததாக ஐடி கூறும் நிலையில், அவற்றில் பாதி தொகை கடந்த 2 ஆண்டுகளில் ஈட்டியதாக சொல்லப்படுகிறது. 2013-14ல் ரூ.20 கோடியும், 2019-20ல் ரூ.28 கோடியும் வருமானம் ஈட்டியுள்ளது.
மேலும், நகைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியில் நிபுணத்துவம் பெற்ற வதேராவின் சிறிய நிறுவனமான எம்/எஸ் ஆர்டெக்ஸின் வருமானத்தில் 2015-16ஆம் ஆண்டில் சுமார் ரூ.4 கோடியும், ரியல் எர்த் எஸ்டேட் நிறுவனத்துக்கு 2010-11 மற்றும் 2012-13 மதிப்பீட்டு ஆண்டுகளில் சுமார் ரூ.1.5 கோடியும் சேர்க்க முடிவு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil